சிரியாவில் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும்; ஐ.நா பாதுகாப்பு சபையில் தீர்மானம் - தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்த இந்தியா

சிரியாவில் அமைதியை நிலைநாட்ட, ராணுவ நடவடிக்கைகளுக்கு பதிலாக அரசியல் தீர்வு ஒன்றை உருவாக்க வேண்டும் என்று ஐ.நா பாதுபாகாப்பு சபையில் இந்தியா கூறியுள்ளது.
சிரியாவில் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும்; ஐ.நா பாதுகாப்பு சபையில் தீர்மானம் - தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்த இந்தியா
x
சிரியாவில் அமைதியை நிலைநாட்ட, ராணுவ நடவடிக்கைகளுக்கு பதிலாக அரசியல் தீர்வு ஒன்றை உருவாக்க வேண்டும் என்று ஐ.நா பாதுபாகாப்பு சபையில் இந்தியா கூறியுள்ளது. 


2011ஆம் ஆண்டில் சிரியாவில் உருவான உள்நாட்டுப் போரில், இதுவரை சுமார் 6 லட்சம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். 66 லட்சம் பேர் அகதிகளாகவும், 67 லட்சம் பேர் உள் நாட்டு அகதிகளாகவும் மாறியுள்ளனர்.

சிரியாவில் போர் நிறுத்தம் ஏற்படுத்தப்பட்டு, அரசியல் தீர்வு உருவாக்கப்பட வேண்டும் என்று ஐ.நா பாதுகாப்பு சபையில் வெள்ளிக்கிழமை அன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.  

BREATH.. சிரியா உள் நாட்டுப் போர், அகதிகள், ஐ.நா பாதுகாப்பு சபை, இந்திய பிரதிநிதி திருமூர்த்தி

ஐ.நா பாதுகாப்பு சபையில் இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தது. 

வாக்கெடுப்பின் போது உரையாற்றிய இந்திய பிரதிநிதி டி.எஸ்.திருமூர்த்தி, சிரியா துண்டாடப்படாமல் ஒரே நாடாக தொடரச் செய்வதன் மூலம் இந்த பிராந்தியத்தில் அரசியல் நிலைத்தன்மையையும், பாதுகாப்பையும் உறுதி செய்ய முடியும் என்று கூறினார்.

சிரியா பிரச்சினைக்கு ராணுவ ரீதியான தீர்வு சாத்தியமில்லை என்றும், ஐ.நாவின் வழிகாட்டுதலில். சிரியா அரசின் தலைமையில் முன்னெடுக்கப்படும் அரசியல் தீர்வு தான் சரியாக இருக்கும் என்றும் இந்தியா கருதுவதாக டி.எஸ்.திருமூர்த்தி கூறினார். 

தற்போது சிரியாவில் சுமார் 1.3 கோடி மக்களுக்கு எதோ ஒரு வகையில் மனிதாபிமான உதவிகள் தேவைப்படுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார். 

சிரியாவின் வட மேற்கு பகுதி மீது மட்டும் கவனம் செலுத்தாமல், அனைத்து பகுதிகள் மீதும் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தியுள்ளது.
 


Next Story

மேலும் செய்திகள்