பயங்கர பள்ளத்தா​க்கு நடுவே 2.1 கி.மீ நீளம் கயிற்றில் நடந்த வீரர்கள்
பதிவு : ஜூலை 08, 2021, 01:40 PM
ஸ்வீடனில், பயங்கரமான பள்ளத்தாக்கின் மேல் கயிறு கட்டி, அதன் மேல் நடந்து புதிய உலக சாதனை படைத்த வீரர்களின் சாகச பயணத்தை தற்போது பார்க்கலாம்...
 சாகசம்
கயிற்றின் மீது நடந்து உலக சாதனை


ஸ்வீடனில், பயங்கரமான பள்ளத்தாக்கின் மேல் கயிறு கட்டி, அதன் மேல் நடந்து புதிய உலக சாதனை படைத்த வீரர்களின் சாகச பயணத்தை தற்போது பார்க்கலாம்...

ஸ்வீடன் நாட்டின் லாப்லாந்த பகுதியில் உள்ள லப்போர்டென் மலைப்பகுதியில் 2.1 கிலோ மீட்டர் நீளம் கொண்ட பள்ளத்தாக்கு உள்ளது.

இந்த பள்ளத்தாக்த்தில் இரு முனைகளை இணைக்கும் கயிறு ஒன்றை ஜெர்மனியை சேர்ந்த சாகச வீரர்கள் குழு ஒன்று, நடந்து சென்றும், ட்ரோன்கள் உதவியுடனும் அமைத்தது.

பின்னர் 2.13 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்த கயிற்றின் மீது நான்கு ஜெர்மனிய வீரர்கள் அடுத்ததடுத்து நடந்து புதிய உலக சாதனை ஒன்றை உருவாக்கினர்.

பள்ளத்தாக்கின் தரை பகுதியில் இருந்து 600 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்ட இந்த கயிற்றின் மீது, பாதுகாப்பு கயிறு ஒன்றை இணைத்துக் கொண்ட நிலையில், மிக மெதுவாக நடந்து கடந்தனர்.

கயிற்றின் மீது நடந்த போது ஹெர்ட்ரிச் என்ற வீரர், இறுதி கட்டத்திற்கு சில அடிகளுக்கு முன்பு தவறி விழுந்து, பாதுகாப்பு கயிற்றின் உதவியினால், மீண்டு வந்த காட்சி, பதைபதைக்க வைக்கும் வகையில் உள்ளது.

இந்த வகையான வீர சாகச விளையாட்டுகளில் புதிய சாதனையை நிகழ்த்தும் வீரர்களின் குழுவினர் அனைவரும், சாதனையாளர்கள் பட்டியலில் சேர்க்கப்படுகின்றனர். அவர்களின் சாதனைக்கு துணையாக செயல்பட்ட  இதர குழு உறுப்பினர்களும் இந்த பட்டியலில் சேர்க்கப்படுவது வழக்கம்.

தொடர்புடைய செய்திகள்

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

252 views

"3 வது அலை வந்தால் சமாளிக்க தயார்" - மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேச்சு

இந்தியாவில் எந்த காரணத்தை முன்னிட்டும் 3 வது அலை பரவி விடக் கூடாது என சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

116 views

இளைஞர்களை குறிவைத்து போதை மாத்திரை விற்பனை : வடசென்னையில் போதை மாத்திரை விற்பனை ஜரூர் - வடமாநிலம் டூ வடசென்னை தலைவன் கைது

வடசென்னையில் சிறுவர்கள், இளைஞர்களை குறிவைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்த தலைவனை போலீசார் பொறி வைத்து பிடித்தனர்.

86 views

பிற செய்திகள்

ஹாங்காங் சுதந்திரத்திற்கு போராடிய இளைஞர் - இளைஞருக்கு 9 ஆண்டுகள் சிறை

ஹாங்காங்கில் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் முதல் முறையாக இளைஞர் ஒருவருக்கு 9 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டிருப்பதற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன...

14 views

வால்ட் டிஸ்னி நிறுவன ஊழியர்களுக்குக் கட்டாய தடுப்பூசி

அமெரிக்காவில் உள்ள வால்ட் டிஸ்னி நிறுவனம், தங்கள் நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்கள் கட்டாயமாக கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது.

26 views

புதிய குடும்பத்தினரான குழந்தை நீர்யானை - பூங்காவினர் மகிழ்ச்சியுடன் வரவேற்பு

மெக்சிகோவிலுள்ள உயிரியல் பூங்காவின் புதிய குடும்பத்தினராக குழந்தை நீர்யானையை பூங்காவினர் மகிழ்ச்சியோடு வரவேற்றனர்.

5 views

பிங்க் நிறத்திற்கு மாறிய ஏரிகள் - காரணத்தை ஆராய்ந்து வரும் அதிகாரிகள்

அர்ஜென்டினாவில் உள்ள படகோனியா பகுதியில் இருக்கும் இரண்டு ஏரிகள் பிங்க் நிறத்திற்கு மாறியது.

51 views

கிரீஸை வாட்டி வரும் வெப்ப அலை - தகிக்கும் ஏதென்ஸ் நகரம்

கிரீசில் நிலவி வரும் கடும் வெப்ப அலையில் ஏதென்ஸ் மக்கள் தகித்து வருகின்றனர்.

100 views

தீவிரமாகப் போகும் ஊரடங்கு கட்டுப்பாடுகள்? - அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவிப்பு

அமெரிக்காவில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாவதற்கு சாத்தியக்கூறுகள் இருப்பதாக பைடன் தெரிவித்துள்ளார்.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.