மியாமி நகரில் தகர்க்கப்பட்ட குடியிருப்பு - இடிபாடுகளில் சிக்கி காணாமல் போன 121 பேர்
பதிவு : ஜூலை 05, 2021, 05:16 PM
அமெரிக்காவின் மியாமி நகரில் இரண்டு வாரங்களுக்கு முன்பு இடிந்து விழுந்த அடுக்குமாடி குடியிருப்பின், எஞ்சிய பகுதி வெடி வைத்து தகர்க்கப்பட்டது.
ஜூன் 24 அன்று, புளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி நகரில் உள்ள 12 மாடிக் கட்டிடத்தின் ஒரு பகுதி திடீரென்று இடிந்து விழுந்ததில், 24 பேர் பலியாகினர். 11 பேர் காயமடைந்தனர். இடிபாடுகளில் சிக்கி, காணமல் போன 121 பேர் பற்றி இதுவரை தகவல்கள் எதுவும் கண்டறியப்படவில்லை.1980இல் கட்டப்பட்ட இந்த அடுக்குமாடி குடியிருப்பின் தரை தளத்திற்கு கீழே அமைக்கப்பட்டுள்ள கார் நிறுத்தகத்தின் சுவர்களில் நீர் கசிவு ஏற்பட்டு பலவீனமானதாலும், ஆ.சி.சி கான்க்ரீட் தளங்களில் உள்ள இரும்பு கம்பிகள் துருப்பிடித்து, பலமிலந்ததாலும், இந்த கட்டிடம் இடிந்து நெறுங்கியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.காணாமல் போன 121 பேரை கண்டுபிடிக்கும் பணிகள் ஒத்தி வைக்கப்பட்டு, பாதி இடிந்த நிலையில் உள்ள இந்த அடுக்கு மாடி கட்டடம் வெடி வைத்து தகர்க்க திட்டமிடப்பட்டது. ஞாயிறு அன்று இரவு 10.30 மணிக்கு, வெடி வைக்கப்பட்டு இந்த கட்டிடம் தகர்க்கப்பட்டது. மியாமி நகரை எல்சா புயல் தாக்க உள்ளதால், அதற்கு முன்பாக இதை தரைமட்டமாக்க முடிவு செய்யப்பட்டது.வெடி வைப்பதற்கு முன்பாக, இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் நினைவாக, மெழுகுவர்த்தி ஏந்தி பொது மக்கள் அஞ்சலி செலுத்தினர்.



தொடர்புடைய செய்திகள்

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

674 views

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

460 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

62 views

பிற செய்திகள்

23வது பிறந்தநாளை கொண்டாடும் கூகுள் - உலகின் நம்பர் ஒன் தேடுதல் எந்திரம்

உலகின் மிகப் பெரிய தேடுதல் எந்திரமான கூகுள் நிறுவனம், தனது 23ஆவது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறது.

9 views

நீண்ட நாட்களுக்கு பிறகு இசை நிகழ்ச்சி - "ரோலிங் ஸ்டோன்ஸ்" இசைக்குழு நடத்தியது

அமெரிக்காவின் மிக பிரபலமான ரோலிங் ஸ்டோன்ஸ் இசைக்குழு நீண்ட நாட்களுக்கு பிறகு மேடை கச்சேரியை துவக்கியுள்ளனர்.

14 views

அச்சுறுத்தும் கால நிலை மாற்றம் - உக்ரைனில் நூற்றுக்கணக்கானோர் போராட்டம்

கால நிலை மாற்றத்தை எதிர்கொள்ள அரசு கூடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ள வலியுறுத்தி உக்ரைனில் போராட்டம் நடைபெற்றது.

11 views

ஆப்கானிஸ்தானில் மீட்புப் பணிகள் - இராணுவ வீரர்களை கௌரவப்படுத்திய மெர்கெல்

ஆப்கானிஸ்தானில் இருந்து மக்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்ட ஜெர்மன் இராணுவ வீரர்களை அந்நாட்டு அதிபர் ஏஞ்சலா மெர்க்கெல் கவுரவப் படுத்தினார்.

9 views

அமெரிக்காவில் அதிகரிக்கும் கொரோனா பரவல் - 4 கோடியே 29 லட்சத்தைக் கடந்த மொத்த பாதிப்பு

அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 29 லட்சத்தைத் தாண்டியது.

10 views

சீனாவில் புயல்...கனமழை...வெள்ளப்பெருக்கு - ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்

மத்திய சீனாவில் புயல் மற்றும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.