உலகில் மிக மகிழ்ச்சியான நாடு பின்லாந்து - இந்தியர்களை ஈர்க்க திட்டம்

மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ள பின்லாந்தில், பணியாளர்கள் பற்றாக்குறை கடுமையாக நிலவி வருகிறது. இதைப் பற்றிய விவரங்களை இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்
உலகில் மிக மகிழ்ச்சியான நாடு பின்லாந்து - இந்தியர்களை ஈர்க்க திட்டம்
x
55 லட்சம் மக்கள் தொகை கொண்ட வடக்கு ஐரோப்பிய நாடான பின்லாந்தில் வாழ்க்கை தரம், மனித உரிமைகள், மக்கள் நலத் திட்டங்கள் மிகச் சிறப்பாக உள்ளதாக கருதப்படுகிறது.உலக அளவில் மிக மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் தொடர்ந்து நான்காவது முறையாக முதல் இடத்தில் உள்ள பின்லாந்தில், புது விதமான பிரச்சனை ஒன்று உருவாகியுள்ளது.பின்லாந்தில் குழந்தைகள் பிறப்பு விகிதம் வெகுவாக குறைந்துள்ளதால், வேலைக்கு செல்லும் வயதுடையவர்களின் எண்ணிக்கை குறைந்து, பணியில் இருந்து ஓய்வு பெற்ற முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது
100 பணியாளர்களுக்கு 39 முதியவர்கள் தற்போது உள்ள நிலையில், 2030இல் இந்த விகிதம் 47.5ஆக அதிகரிக்கும் என்று ஐ.நா கணித்துள்ளது.இதன் காரணமாக, பல்வேறு துறைகளில் பணியாற்ற போதுமான ஊழியர்கள் இல்லாமல், சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.வெளிநாடுகளில் இருந்து பின்லாந்தில் பணி புரிய அதிக எண்ணிக்கையிலான பணியாளர்களை வரவழைக்க பின்லாந்து அரசு திட்டமிட்டுள்ளது.சுகாதாரத் துறைக்கு ஸ்பெயினில் இருந்தும், உலோகத் துறைக்கு ஸ்லோவேக்கியாவில் இருந்தும், மென்பொருள் மற்றும் கடல் போக்குவரத்துத் துறைகளுக்கு ரஷ்யா, இந்தியா மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்தும் ஊழியர்களை வரவழைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அரசு துறை ஆய்வாளர் ஒருவர்  கூறுகிறார்.
ஆனால் வெளிநாட்டவரை பணியமர்த்த உள்ள தயக்கமும், குடியேறிகளுக்கு எதிரான போக்குகளும் இதற்கு தடையாக உள்ளது. ஆண்டுக்கு 20,000 முதல் 30,000 வெளிநாட்டினரை பின்லாந்திற்கு வரவழைத்து, பணிகளில் அமர்த்தினால் தான் பொது சேவைகளை தொடர்ந்து செயல்படுத்த முடியும் என்று பின்லாந்த்து அரசு எச்சரித்துள்ளது. 




Next Story

மேலும் செய்திகள்