கடலில் கலந்த கச்சா எண்ணெய் - கழிவுகளை சுத்தப்படுத்தும் பணி தீவிரம்

தைவான் கடலோரப்பகுதியில் அமைந்துள்ள சுத்திகரிப்பு நிலையம் ஒன்றில் இருந்து, கச்சா எண்ணை கசிந்து கடலில் கலந்து, கடல் நீர் மாசுபாடு ஏற்பட்டுள்ளது. இதை சுத்தப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
கடலில் கலந்த கச்சா எண்ணெய் - கழிவுகளை சுத்தப்படுத்தும் பணி தீவிரம்
x
தைவான் கடலோரப்பகுதியில் அமைந்துள்ள சுத்திகரிப்பு நிலையம் ஒன்றில் இருந்து,  கச்சா எண்ணை கசிந்து கடலில் கலந்து, கடல் நீர் மாசுபாடு ஏற்பட்டுள்ளது. இதை சுத்தப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

சீனாவிற்கு அருகே உள்ள தீவு நாடான தைவானில், கெளசங் என்ற கடற்கரை நகரில், தைவான் அரசுக்கு சொந்தமான நிறுவனத்தின் மிகப்பெரிய கச்சா எண்ணை சுத்திகரிப்பு நிலையம், துறைமுகத்தின் அருகே அமைந்துள்ளது. 

மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து மிகப் பெரிய டாங்கர் கப்பல்கள் மூலம் இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணை கடல் மீது அமைக்கப்பட்டுள்ள குழாய்கள் மூலம் இந்த சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பப்படுகிறது.

கெளசிங் பகுதி அருகே கடல் பரப்பில் கச்சா எண்ணை கசிவு, கழிவுகளை நீக்கும் பணியாளர்கள் 

செவ்வாய் அன்று அதிகாலையில் ஒரு டாங்கர் கப்பலில் இருந்து கச்சா எண்ணை குழாய் மூலம் கரைக்கு அனுப்பபட்ட போது, திடீரென்று குழாயில் உடைப்பு ஏற்பட்டு, பெரும் அளவிலான கச்சா எண்ணை கடலில் கலந்தது.

இதைத் தொடர்ந்து கப்பலில் இருந்து கச்சா எண்ணை அனுப்புவது நிறுத்தப்பட்டு, கடலில் கலந்த கச்சா எண்ணையை அகற்றும் பணி தொடங்கப்பட்டது.

மோசமான வானிலை காரணமாக இந்த எண்ணை கசிவு ஏற்பட்டுள்ளதாக கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம் கூறியுள்ளது.

கடலில் கலந்துள்ள கச்சா எண்ணையை அகற்ற ஸ்பாஞ்சுகளையும், சில வகை ரசாயனங்களையும் பயன்படுத்தி, ஊழியர்கள் இந்த பணியில் ஈடுப்பட்டுள்ளனர். 

விரைவில் இந்த சுத்தப்படுத்தும் பணிகள் முடிவடையும் என்று தைவான் அரசு கூறியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்