உலகை மிரட்டும் டெல்டா வைரஸ் - கண்காணிப்பை அதிகரிக்கும் நாடுகள்

இந்தியாவில் 2-வது தொற்றுக்கு காரணமான டெல்டா உருமாறிய வைரஸ் உலக நாடுகளை மிரட்டி வருகிறது. டெல்டா வைரஸ் பாதிப்பு அதிகம் கொண்ட நாடுகள் எவை... அந்நாடுகள் மேற்கொள்ளும் நடவடிக்கை என்ன என்பதை பார்க்கலாம்...
உலகை மிரட்டும் டெல்டா வைரஸ் - கண்காணிப்பை அதிகரிக்கும் நாடுகள்
x
இந்தியாவில் 2-வது தொற்றுக்கு காரணமான டெல்டா உருமாறிய வைரஸ் உலக நாடுகளை மிரட்டி வருகிறது. டெல்டா வைரஸ் பாதிப்பு அதிகம் கொண்ட நாடுகள் எவை... அந்நாடுகள் மேற்கொள்ளும் நடவடிக்கை என்ன என்பதை பார்க்கலாம்...


சீனாவில் காணப்பட்ட கொரோனா வைரஸ், பிரிட்டன், தென் ஆப்பிரிக்கா, பிரேசில், இந்தியா மற்றும் அமெரிக்காவில் உருமாறி மக்களை தாக்கியது.  

 
இந்தியாவில் உருமாறிய டெல்டா வைரஸ்தான், கொரோனா இரண்டாவது அலையின் ஆவேச தாக்குதலுக்கு காரணம் என வல்லுநர்களால் தெரிவிக்கப்படுகிறது.


மற்ற வகை வைரஸ்களை விடவும் டெல்டா வைரஸ் 50 சதவீதம் அதிகம் பரவும் தன்மையை கொண்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.


உலகம் முழுவதும் 74 நாடுகளில் டெல்டா வைரஸ் தொற்று காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


பிரிட்டனில் டெல்டா வைரசின் பிடி இறுகி வருகிறது. அங்கு புதிதாக தொற்றுக்கு உள்ளாகுபவர்களில் 99 சதவீதம் டெல்டா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எனக் கணிக்கப்பட்டுள்ளது.   


ரஷ்யாவிலும் கொரோனாவால் பாதிப்பு அதிகரிக்க டெல்டா வைரஸ் காரணம் எனக் கூறப்படுகிறது. மாஸ்கோவில் புதிதாக பாதிக்கப்படுவோரில் 89.3 சதவீத பேர் டெல்டா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் என மேயர் செர்ஜி சோப்யானின் கூறியுள்ளார்.


கனடாவில் இந்த வாரம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 66 சதவீத பேர் டெல்டா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  


 அமெரிக்காவில் பதிவாகும் தினசரி பாதிப்பில் 10 சதவீதம் டெல்டா வைரசால் ஏற்பட்டவை என்று அந்நாட்டு தொற்றுநோய் தடுப்பு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

ஜெர்மனியிலும் தினசரி பாதிப்புக்கு உள்ளாவோரில் 6 சதவீதம் பேர் டெல்டா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.  


இந்நாடுகளில் கொரோனா 3-வது அலைக்கு டெல்டா வைரஸ் காரணமாக இருக்கலாம் எனவும் மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.  


டெல்டா வைரஸ் பாதிப்பு காணப்படும் நாடுகளில் பரிசோதனை, தனிமைப்படுத்தல் போன்ற தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.


டெல்டா வைரஸ் ஆபத்தானது எனக் கூறியிருக்கும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், தடுப்பூசி போட்டுக் கொள்ளாத மக்கள் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள முன்வர வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார். இதேபோன்று பிற நாடுகளும் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்தி வருகின்றன. 


Next Story

மேலும் செய்திகள்