புதிய பிரமாண்ட எண்ணெய் வயல் - சின்ஜியாங் மாகாணத்தில் கண்டுபிடிப்பு

சீனாவின் சின்ஜியாங் மாகாணத்தில் 100 கோடி டன்கள் அளவு கொண்ட கச்சா எண்ணை மற்றும் இயற்கை எரிவாயு வயல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதைப் பற்றிய விவரங்களை இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.
புதிய பிரமாண்ட எண்ணெய் வயல் - சின்ஜியாங் மாகாணத்தில் கண்டுபிடிப்பு
x
சீனாவின் வட மேற்கு எல்லைப் பகுதி மாகாணமான சின்ஜியாங் மாகாணத்தில் உய்குர் இன மக்கள் அதிக அளவில் வாழ்கின்றனர். இஸ்லாமிய மதத்தை சேர்ந்த உய்குர் இன மக்கள் மீது சீன அரசு பல்வேறு அடக்குமுறைகளை புரிவதாக, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகள் குற்றம் சாட்டியுள்ளன. இந்நிலையில் சின்ஜியாங் மாகாணத்தில், மிகப் பெரிய கச்சா எண்ணை வயல் ஒன்றை சீன தேசிய பெட்ரோலிய நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. சின்ஜியாங் மாகாணத்தில் தரிம் நதியின் தெற்கு பகுதியில் உள்ள பூமான் (Fuman) பகுதியில் கடந்த ஆறு ஆண்டுகளாக சீன தேசிய பெட்ரோலிய நிறுவனம், கச்சா எண்ணை வயல்களை கண்டறிய 56 சோதனைக் கிணறுகளை தோண்டி , ஆய்வுகளை மேற்கொண்டது. இதைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் 100 கோடி டன் அளவுக்கு கச்சா எண்ணை மற்றும் இயற்கை எரிவாயு கொண்ட மிகப் பெரிய எண்ணை வயலை கண்டறிந்துள்ளதாக, தரிம் ஆயில்பீல்ட் நிறுவன பொது மேலாளர் கூறுகிறார். பூமான் பகுதியை உள்ளடக்கிய தக்லமக்கன் பாலைவனத்தில் சுமார் 1,780 கோடி டன் அளவுக்கு எண்ணை படிமங்கள் உள்ளதாக அனுமானிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் 160 டன் அளவுக்கு எண்ணை வளம் கொண்ட 100 எண்ணை வயல்கள் இதுவரை கண்டறியப்பட்டுள்ளன.

Next Story

மேலும் செய்திகள்