ஈரானில் உதயமாகும் புதிய ஆட்சி - அதிபராகிறார், இப்ராஹிம் ரைசி

ஈரான் அதிபர் தேர்தலில் இப்ராஹிம் ரைஸி என்ற பழமைவாதத் தலைவர் வெற்றி பெற்றுள்ளார். இதைப் பற்றிய விவரங்களை இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.
ஈரானில் உதயமாகும் புதிய ஆட்சி - அதிபராகிறார், இப்ராஹிம் ரைசி
x
அமெரிக்கா, சவுதி அரேபியா மற்றும் பல்வேறு அரேபிய நாடுகளுடன் மோதல் போக்கை கொண்டுள்ள ஈரான் நாட்டின் அதிபர் தேர்தல் வெள்ளியன்று அமைதியான முறையில் நடந்து முடிந்தது. ஈரான் அதிபராக இரண்டு முறை பதவி வகித்த ஹசன் ரூஹானி, தேர்தல் விதிமுறைகளின் படி மூன்றாவது முறையாக அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாது என்பதால், இந்தத் தேர்தலில் அவர் பங்கெடுக்கவில்லை. அதிபர் தேர்தலில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியும் மத குருமாருமான இப்ராஹிம் ரைசி, ரிசர்வ் வங்கி முன்னாள் தலைவர் அப்துல் நாசர் ஹெமட்டி உள்ளிட்ட நால்வர் போட்டியிட்டனர். பதிவான வாக்குகளில் சுமார் 62 சதவீத வாக்குகளை பெற்று இப்ராஹிம் ரைசி வெற்றி பெற்றுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் கூறியுள்ளனர். வெற்றி பெற்ற இப்ராஹிம் ரைசிக்கு, தற்போது அதிபராக உள்ள ஹசன் ரூஹானி, வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். 1988இல் ஈரானில் அரசியல் கைதிகள் பெரும் எண்ணிக்கையில் கொல்லப்பட்டதற்கு இப்ராஹிம் ரைசி தான் என குற்றம்சாட்டி அவருக்கு அமெரிக்க அரசு தடை விதித்தது. 60 வயதான ரைசி, தீவிர மதப் பழமைவாதி... பெண்களுக்கு சம உரிமைகள் அளிப்பதை எதிர்ப்பவர் என்று கருதப்படுகிறது. அணு ஆயுதங்கள் தயாரிப்பதை கட்டுப்படுத்த அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் ஈரான் 2015இல் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியுள்ள நிலையில், மீண்டும் அந்த ஒப்பந்தத்தைப் புதுபிக்க முயற்சிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் ஈரானின் புதிய அதிபராக பதவியேற்க உள்ள இப்ராஹிம் ரைசியினால், அமெரிக்காவுடனான உறவுகளை மேம்படுத்த முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்