வேகமாக பரவும் டெல்டா வைரஸ் - அமெரிக்க அரசு

டெல்டா வைரஸ் எனப்படும் உருமாற்றம் பெற்ற கொரோனா வைரஸின் நோய் பரவல் வேகம் மிக அதிகமாக உள்ளது என அமெரிக்க அரசின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் கண்டறிந்துள்ளது.
x
 டெல்டா வைரஸ் எனப்படும் உருமாற்றம் பெற்ற கொரோனா  வைரஸின் நோய் பரவல் வேகம் மிக அதிகமாக உள்ளது என அமெரிக்க அரசின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் கண்டறிந்துள்ளது. 


இந்தியாவில் முதன் முறையாக கண்டறியப்பட்ட பி.1.617.2 எனப்படும் உருமாற்றம் பெற்ற கொரோனா வைரஸுக்கு டெல்டா வைரஸ் என்று உலக சுகாதார நிறுவனம் பெயர் சூட்டியுள்ளது.


மிக அதிக வேகத்தில் பரவவும் தன்மை கொண்ட இந்த டெல்டா வைரஸ் தான் இந்தியாவில் கொரோனா தொற்றுதலின் இரண்டாவது அலை வெகு வேகமாக பரவக் காரணம் என்று கருதப்படுகிறது.


இந்நிலையில், டெல்டா வைரஸை கவலையளிக்கும் திரிபு என்று அமெரிக்க அரசின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் வகைப்படுத்தியுள்ளது. இதற்கு முன்பு இதை கவனத்திற்குரிய திரிபு என்று வகைபடுத்தியிருந்தது.


அமெரிக்காவில் ஏற்படும் கொரோனா தொற்றுதல்களில் டெல்டா வைரஸின் பங்கு தற்போது 10.3 சதவீதமாக உள்ளது.


பிரிட்டனில் தற்போது ஏற்படும் கொரோனா தொற்றுதல்களில் 99 சதவீதம் டெல்டா வைரஸினால் ஏற்பட்டு வருவதாக அந்நாட்டு சுகாதாரத் துறை கூறியுள்ளது.


டெல்டா வைரஸ் தற்போது 80 நாடுகளுக்கு பரவியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

 
டெல்டா வைரஸின் பரவல் வேகம், பழைய கொரோனா வைரஸின் பரவல் வேகத்தை விட 97 சதவீதம் அதிகமாக உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்