விண்வெளி நிலைய கட்டுமான பணியில் சீனா - பயிற்சி பெற்ற 3 வீரர்களை அனுப்பியது

விண்வெளி நிலைய கட்டுமான பணிகளை மேற்கொள்வதற்காக, பயிற்சி பெற்ற மூன்று விண்வெளி வீரர்கள் சீனாவிலிருந்து, விண்ணுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
விண்வெளி நிலைய கட்டுமான பணியில் சீனா - பயிற்சி பெற்ற 3 வீரர்களை அனுப்பியது
x
லாங் மார்ச் 2எப் ராக்கெட் மூலம் ஷென்சூ-12 என்ற விண்கலத்தில் 3 விண்வெளி வீரர்களும் பயணித்தனர். ராக்கெட் புறப்பட்ட 10 நிமிடங்களில் புவி வட்டப்பாதையை அடைந்ததும், வீரர்கள் இருந்த விண்கலம் தனியாக பிரிந்து விண்வெளி நிலையத்தை நோக்கி பயணித்தது. இதனையடுத்து திட்டம் வெற்றியடைந்ததாக விஞ்ஞானிகள் அறிவித்தனர். சுமார் 5 ஆண்டுகளுக்கு பிறகு சீனா விண்வெளிக்கு வீரர்களை அனுப்பி உள்ளது. இந்த வீரர்கள் மூன்று மாதங்கள் தியான்ஹெ பெட்டகத்தில் தங்கி, விண்வெளி நிலையத்தின் கட்டுமான பணிகளில் ஈடுபட உள்ளனர். ஸ்பேஸ் சூட் எனப்படும் பாதுகாப்பு உடைகளுடன்,  விண்வெளியில் மிதந்தபடி, கட்டுமான பணிகளை மேற்கொள்வார்கள். 


Next Story

மேலும் செய்திகள்