தடுப்பூசி, மருந்துகளுக்கான காப்புரிமையை ரத்து செய்ய உதவ வேண்டும் - ஜி 7 நாடுகள் மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் உரை

கொரோனா தடுப்பூசி மற்றும் மருந்துகள் மீதான காப்புரிமையை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஜி7 நாடுகள் ஆதரவளிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
தடுப்பூசி, மருந்துகளுக்கான காப்புரிமையை ரத்து செய்ய உதவ வேண்டும் - ஜி 7 நாடுகள் மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் உரை
x
கொரோனா தடுப்பூசி மற்றும் மருந்துகள் மீதான காப்புரிமையை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஜி7 நாடுகள் ஆதரவளிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.  இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ஜி7 நாடுகள் மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் பங்கேற்று உரையாற்றினார். பெரும்தொற்றுகளுக்கு எதிராக மீட்புத் திறனை கட்டமைத்தல், வலிமையான சுகாதார கட்டமைப்பை ஏற்படுத்துதல் என்ற தலைப்புடன் இந்த கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி,  சர்வதேச அளவிலான சுகாதார நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கான கூட்டு முயற்சிக்கு இந்தியா முழு ஆதரவை வழங்க உறுதிபூண்டுள்ளதாக குறிப்பிட்டார். கொரோனா தடுப்பூசி மற்றும் மருந்துகளுக்கான தொழில்நுட்ப காப்புரிமையை ரத்து செய்ய வேண்டும் என்ற இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா முன்மொழிந்துள்ள கோரிக்கைக்கு ஜி7 நாடுகள் ஆதரவளிக்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தினார்.  எதிர்காலத்தில் கொரோனா போன்ற பெரும் தொற்றுக்களை தடுக்க சர்வதேச ஒற்றுமை     அவசியம் எனவும் பிரதமர் நரேந்திர மோடி வலியறுத்தினார்.  


Next Story

மேலும் செய்திகள்