இஸ்ரேலிய கடற்படைக்கு ஜெர்மன் போர்க்கப்பல் - கடல்வழி பாதுகாப்பை பலப்படுத்தும் இஸ்ரேல்

ஜெர்மனியில் தயாரிக்கப்பட்ட மிக நவீன போர் கப்பல் ஒன்றை இஸ்ரேல் வாங்கியுள்ளது பற்றி ஒரு தொகுப்பு
இஸ்ரேலிய கடற்படைக்கு ஜெர்மன் போர்க்கப்பல் - கடல்வழி பாதுகாப்பை பலப்படுத்தும் இஸ்ரேல்
x
ஹமாஸ் மற்றும் ஹெஸ்பொல்லா அமைப்புகளின் தொடர் தாக்குதல்களை எதிர் கொண்டுள்ள இஸ்ரேலின் கடற்படையை வலுப்படுத்த சார் 6 ரக போர்க்கப்பல் ஒன்றை ஜெர்மனியில் இருந்து இஸ்ரேல் வாங்கியுள்ளது.
1,900 டன்கள் எடை கொண்ட, 90 மீட்டர்கள் நீளமுடைய இந்த சிறிய ரக போர்க்கப்பல் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளது.சார் 6 ரக போர்க்கப்பல், இஸ்ரேல், கடல் நடுவே எண்ணை கிணறுகள், லெப்னான், ஹெஸ்பொல்லா ஆஸ் என்ற பெயரிடப்பட்டுள்ள இந்த போர் கப்பலில் பாரக் 8 ரக விமான எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் கப்பல்களை தாக்கும் 16 ஏவுகணைகள் பொருத்தப்பட்டுள்ளன. ஆஸ் என்றல் ஹீப்ரூ மொழியில் வீரம் என்று பொருள்.இதே ரக போர்க்கப்பல் ஒன்று கடந்த ஆண்டு டிசம்பரில் ஜெரம்னியில் இருந்து வந்துள்ள நிலையில், இந்த புதிய போர் கப்பலையும் சேர்த்து, இஸ்ரேல் கடற்படையில் ஏவுகணைகள் பொருத்தப்பட்டுள்ள போர்கப்பல்களின் எண்ணிக்கை 15ஆக அதிகரித்துள்ளது.மேலும் இரண்டு சார் 6 ரக போர்க்கப்பல்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் வாங்கப்பட உள்ளது. 
7,400 கிலோ மீட்டர் வரை செல்லத் தேவையான எரிபொருட்களை கொண்ட இந்த போர்க் கப்பல், இஸ்ரேல் கடற்படையின் நீண்ட தூர ரோந்து பணிகளுக்கு மிகவும் பயன்படும் என்று கருதப்படுகிறது.லெபனான் அருகே, மத்திய தரைக்கடல் பகுதியில் உள்ள, இஸ்ரேலுக்கு சொந்தமான இயற்கை எரிவாயு கிணறுகளை லெபனானை சேர்ந்த அமைப்புகளின் தாக்குதலில் இருந்து பாதுகாக்கவும் இந்த அதி வேக போர்க்கப்பல் பயன்படும்.இஸ்ரேலோடு எந்த ஒரு சமாதான உடன்படிக்கைகளுக்கும் தயாராக இல்லாத ஹிஸ்பொல்லா அமைப்புக்கு ஈரான் ஏராளமான ஆயுத உதவிகளை தொடர்ந்து வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.




Next Story

மேலும் செய்திகள்