அமெரிக்க அதிபர் பைடன் பிரிட்டன் வருகை - ஜி-7 மாநாட்டில் பங்கேற்கிறார்

ஜி-7 மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பிரிட்டன் சென்றடைந்தார்.
அமெரிக்க அதிபர் பைடன் பிரிட்டன் வருகை - ஜி-7 மாநாட்டில் பங்கேற்கிறார்
x
ஜி-7 மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பிரிட்டன் சென்றடைந்தார்.

பிரிட்டனின் கார்ன்வால் நகரில் நாளை முதல் வருகிற 13-ம் தேதி வரை ஜி-7 மாநாடு நடைபெற உள்ளது. இதில் ஜி-7 கூட்டமைப்பில் உள்ள 7 உறுப்பு நாடுகளின் முக்கிய தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இதற்காக தனி விமானம் மூலம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது மனைவி ஜில் பைடனுடன் பிரிட்டன் சென்றடைந்தார். இது, அமெரிக்க அதிபராக பதவியேற்ற பின்னர் பைடன் செல்லும் முதல் வெளிநாட்டுப் பயணம் ஆகும். பிரிட்டன் வந்தடைந்த பின்னர், சஃபால்க் நகரில் அமெரிக்க வீரர்கள் மத்தியில் பைடன் உரையாற்றினார். அப்போது, ரஷ்யாவுடன் மோதல் போக்கை எதிர்பார்க்கவில்லை என்று கூறிய பைடன், மோசமான நடவடிக்கைகளில் ரஷ்யா ஈடுபட்டால், அமெரிக்கா அர்த்தமுள்ள வகையில் பதில் அளிக்கும் என்று தெரிவித்தார். வருகிற 16-ம் தேதி அமெரிக்க அதிபர் பைடனும், ரஷ்ய அதிபர் புதினும் ஜெனிவாவில் சந்தித்து பேச உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


Next Story

மேலும் செய்திகள்