புதிதாய் பிறந்த காண்டாமிருகக் குட்டி : உயிரியல் பூங்கா ஊழியர்கள் மகிழ்ச்சி

இஸ்ரேல் நாட்டில் உள்ள ரமத் கான் உயிரியல் பூங்கா ஒன்றில், தெற்கு வெள்ளை காண்டாமிருகம் ஒன்று தனது குட்டியை ஈன்றுள்ளதை, உயிரியல் பூங்கா ஊழியர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர்.
புதிதாய் பிறந்த காண்டாமிருகக் குட்டி : உயிரியல் பூங்கா ஊழியர்கள் மகிழ்ச்சி
x
இஸ்ரேல் நாட்டில் உள்ள ரமத் கான் உயிரியல் பூங்கா ஒன்றில், தெற்கு வெள்ளை காண்டாமிருகம் ஒன்று தனது குட்டியை ஈன்றுள்ளதை, உயிரியல் பூங்கா ஊழியர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர். 11 வயதான ரிஹான்னா எனும் தெற்கு வெள்ளை காண்டா மிருகம் இனத்தை சேர்ந்த விலங்கிற்கு ஏற்கனவே 2 குழந்தைகள் உள்ள நிலையில், தற்போது 3வதாக ஒரு ஆண் குட்டியை ஈன்றுள்ளது. தாயும் சேயும் நலமுடன் இருப்பதாகத் தெரிவித்த பூங்கா ஊழியர்கள், தொடர்ந்து கண்காணித்து வருவதாகக் கூறினர். இது அரிய இனங்களில் ஒன்றாக இல்லையென்றாலும், சமீப காலமாக அதிக அளவில் வேட்டையாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்