"சீனாவில் இருந்தே பரவியது கொரோனா" - டிரம்ப் மீண்டும் குற்றச்சாட்டு

சீனாவில் இருந்தே சர்வதேச நாடுகளுக்கு கொரோனா பரவியதாக முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்
சீனாவில் இருந்தே பரவியது கொரோனா - டிரம்ப் மீண்டும் குற்றச்சாட்டு
x
அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப், தன் பதவி காலத்திலேயே கொரோனா சீனாவில் இருந்து பரவியது என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார்,. மேலும் சீனாவுக்கான அமெரிக்காவின் நிதியுதவியை நிறுத்துவதாகவும் அவர் அறிவிப்பும் வெளியிட்டார். இது அப்போது சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதுஇப்போது டிரம்ப் மீண்டும் அதே குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்,. சீனா வைரஸ் வூகான் லேபிலிருந்து வெளியே கசிந்தது என்ற தனது கூற்றை தன்னை எதிர்த்தவர்களும் ஆதரிப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்,.சீனா, அமேரிக்காவுக்கு நஷ்ட ஈடாக 10 ட்ரில்லியன் டாலர்கள் அபராதம் செலுத்த வேண்டும் என்றும் உலக நாடுகளுக்கும்  வைரஸினால் ஏற்பட்ட உயிரிழப்புகள், பலத்த சேதத்துக்கு சீனா நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.



Next Story

மேலும் செய்திகள்