சுண்டெலியால் வந்த சோதனை - சுண்டெலிகளுடன் மல்லுகட்டும் தேசம்

கொரோனாவுடன் உலகமே போராடி கொண்டிருக்கும் வேளையில், படாத பாடு படுத்தும் சுண்டெலிகளை சமாளிக்க இந்தியாவின் உதவியை நாடியுள்ளது, ஆஸ்திரேலியா... சுண்டெலியால் அந்த தேசத்திற்கு நேர்ந்த துயரம் என்ன என்பதை தற்போது பார்க்கலாம்....
சுண்டெலியால் வந்த சோதனை - சுண்டெலிகளுடன் மல்லுகட்டும் தேசம்
x
இங்கு காணப்படும் விலங்குகளை போல் வேறு எங்கும் பார்க்க முடியாது என்கிற அளவிற்கு தனித்துவமான ஜீவராசிகளால் பெரிது வசீகரிக்கும் நாடுதான் ஆஸ்திரேலியா.... ஆனால் இயற்கை சீற்றங்களால் இந்த நாடு சந்திக்கும் இழப்புகள் ஏராளம்... ஒன்று கொழுந்துவிட்டு எரியும் காட்டு தீ... இல்லாவிட்டால்.... வெள்ளம் சூழ்ந்த நகரங்கள்... என  ஒவ்வொரு முறையும் பருவநிலை மாற்றங்களை சாமாளித்து மீண்டெழுந்து வரும் இந்த தேசத்திற்கு தற்போது பெரும் தலைவலியாக மாறியுள்ளன, சுண்டெலிகள்.
கடந்த சில மாதங்களாக தொடர் கனமழையால் தத்தளித்து வந்த தேசம், தற்போது 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பெரும் வறட்சியை சந்தித்துள்ளது... இதனால் இரை தேடி விவசாய நிலங்களுக்கு படையெடுத்து வருகின்றன, சுண்டெலிகள்... ஒரு ஏக்கரில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட எலிகள் என்றால் என்ன செய்வது?.... இப்படி சுண்டெலிகளால் செய்வதறியாது நிர்க்கதியாக நிற்கின்றனர், விவசாயிகள் கஷ்டப்பட்டு அறுவடை செய்து சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டுள்ள தானியங்களும் சுண்டெலிகளால் சேதமாகி வருகின்றன.. ஒரு ஜோடி சுண்டெலியால் 500 குட்டிகளை வரை ஈன்றெடுக்க முடியும் என்பதால்... எலிகளின் இனப்பெருக்கம் சிக்கலை மேலும் சிக்கலாக்கியுள்ளது. சுண்டெலிகளை சமாளிப்பது ஆஸ்திரேலியாவிற்கு இது ஒன்றும் புதிதல்ல.... பத்தாண்டுகளுக்கு ஒரு முறை இதே போன்று சுண்டெலிகளுடன் மல்லுகட்ட வேண்டிய நிலை... சுண்டெலிகளை அழிக்க பல முறைகளை பயன்படுத்தியும்... பலன் கிடைக்காததால்... இந்தியாவின் உதவியை நாடியுள்ளது... ஆஸ்திரேலியா மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நியூ சவுத் வேல்ஸ் மாகாணம், இந்தியாவிடம் தடை செய்யப்பட்ட புரொமாடியோலோன் என்ற எலி மருந்தை கேட்டுள்ளது..ஆனால் இந்த மருந்தை பயன்படுத்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ஒருபுறம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்... 


Next Story

மேலும் செய்திகள்