சீனாவில் 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ள அனுமதி - திடீர் முடிவின் பின்னணி என்ன...?

சீனாவில் குழந்தைகள் பிறப்பு விகிதம் வெகுவாக குறைந்து வருவதால், 3 குழந்தைகளை பெற்றுக் கொள்ள அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது பற்றி விவரிக்கிறது, இந்த தொகுப்பு..
சீனாவில் 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ள அனுமதி - திடீர் முடிவின் பின்னணி என்ன...?
x
சீனாவில் குழந்தைகள் பிறப்பு விகிதம் வெகுவாக குறைந்துள்ளதால், வயோதிகர்களின் விகிதம் அதிகரித்து வருகிறது. இதை சரி செய்ய, இனி மூன்று குழந்தைகள் பெற்றுக் கொள்ள தம்பதிகளுக்கு சீன அரசு அனுமதியளித்துள்ளது.உலகில் மிக அதிக மக்கள் தொகைகொண்ட நாடான சீனாவின் இன்றைய மக்கள் தொகை 141 கோடியாக உள்ளது.பல பத்தாண்டுகளாக மக்கள் தொகையை கட்டுப்படுத்த, தம்பதிகள் ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக் கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.பின்னர் மக்கள் தொகை அதிகரிப்பு விகிதம் குறைந்ததால், 2016ஆம் ஆண்டில் இரண்டு குழந்தைகள் பெற அனுமதியளிக்கப்பட்டது.சீனா, தம்பதிகள், குழந்தைகள், முதியோர்கள், இளைஞர்கள், பணியாளர்கள்சீனாவின் மக்கள் தொகை அதிகரிப்பு விகிதம் மிக மிக குறைந்து, இத்தாலி மற்றும் ஜப்பானின் விகித்திற்கு இணையாக குறைந்துவிட்டத்தை சமீபத்தில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பு உறுதி செய்துள்ளது.இதன் காரணமாக எதிர்காலத்தில் முதியவர்களின் எண்ணிக்கை, இளைஞர்களின் எண்ணிக்கையை விட வெகுவாக அதிகரிக்கும் என்பதால், இனி தம்பதியினர் மூன்று குழந்தைகள் பெற்றுக் கொள்ள சீன அரசு அனுமதியளித்துள்ளது.கடந்த ஆண்டு இறுதி வரை மூன்றாவது குழந்தை பெற்றுக் கொள்பவர்களுக்கு 14.84 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.ஆனால் குழந்தைகளை வளர்க்க மிக அதிக செலவாவதால், சீனாவில் இரண்டு குழந்தைகள் பெற்றுக் கொள்வதற்கும் பெரும்பாலானவர்கள் தயாராக இல்லை என பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன.வேலைக்கு செல்லும் வயதினரின் எண்ணிக்கை குறைந்து, வேலையில் இருந்து ஓய்வு பெற்றவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரிக்கும் போது, பல்வேறு பொருளாதார மற்றும் சமூகப் பிரச்சனைகள் உருவாகின்றன.முதியோர்களை பராமரிக்கவும், தொழிற்சாலைகள், அலுவலகங்களில் பணியாற்றவும் போதுமான எண்ணிக்கையில் பணியாளர்கள் கிடைப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டு, நாட்டின் பொருளாதாரமும் பாதிக்கப்படும் என்பதால் இந்த முடிவுக்கு சீனா வந்துள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 



Next Story

மேலும் செய்திகள்