ஐடி ஊழியர்கள் சந்திக்கும் நெருக்கடிகள் - டால்கோனாவுடன் ஜாலியாக தொடங்கிய ஊரடங்கு

பல நெருக்கடிகளுக்கு மத்தியில் ஒரு வித மன அழுத்தத்துடன் வேலையை தக்க வைத்து கொள்ள போராடும் ஐடி ஊழியர்களின் தவிப்பை விவரிக்கிறது
ஐடி ஊழியர்கள் சந்திக்கும் நெருக்கடிகள் - டால்கோனாவுடன் ஜாலியாக தொடங்கிய ஊரடங்கு
x
கொரோனா நெருக்கடியில் எப்போது வேண்டுமானாலும் வேலை பறி போகலாம் என்ற நிலை ஒரு புறமிருக்க. இருக்கும் வேலையை எப்படியாவது காப்பாற்றி கொள்ள வேண்டிய கட்டாயத்தில் தவிக்கின்றனர், பலர். இப்படி தவிப்பவர்களுள் ஒரு பிரிவினர் தான் ஐடி ஊழியர்கள். கடந்த ஓராண்டிற்கு மேலாக வீட்டில் இருந்து பணிபுரிந்து வரும் இவர்கள்...  டார்கெட் எனப்படும் பணி இலக்குகளை நோக்கி காலம் நேரமுமின்றி ஓய்வின்றி ஓடுகின்றனர். வீட்டில் இருந்து கொண்டு லட்சங்களில் சம்பளம் வாங்குவதில் என்ன கஷ்டம் என்று தோன்றலாம். கை நிறைய சம்பளம், சொகுசு வாழ்க்கை வாழ்பவர்கள் என வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு தோன்றினாலும், ஐ.டி. ஊழியர்கள்  சந்திக்கும் மன நெருக்கடிகளை சொல்லி மாளாது. குடும்பத்தை மறந்து, க்ளையன்ட்டை திருப்திப்படுத்துவது ஒன்றே தங்களின் தலையாய கடமையாக கொண்ட உழைத்து வருகிறார்கள், ஐ.டி. ஊழியர்கள். ஆரம்பத்தில் வொர்க் ஃபிரம் ஹோம் என்றதும், டால்கோனா காஃபியுடன் ஜாலியாக வீட்டில் இருந்து பணிபுரிய தொடங்கியவர்கள்... இன்று கொரோனாவுக்கு உறவுகளை பலி கொடுத்தும், அவர்களது துக்கத்தில் கூட பங்கு கொள்ள முடியாமல் மன அழுத்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். வீட்டில் ஒருவருக்கு கொரோனா என்றாலும் சரி, தானே கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்டிருந்தாலும் சரி, தனது மேலதிகாரி சொல்லும் வேலையை செய்தாக வேண்டும்... இல்லாவிட்டால் வேலை பறி போகிவிடுமோ என்ற அச்சம் வேறு. நாளொன்றுக்கு 14 மணிநேரத்தை கடந்தும் வேலை செய்ததாக  வேண்டிய கட்டாயம், இரண்டு மாதங்களில் முடிக்க வேண்டிய வேலையை ஒரு மாதத்தில் முடிக்க சொல்லி நெருக்கடி என தாங்கள் சந்திக்கும் அழுத்தங்களை வேதனையுடன் பட்டியலிடுகின்றனர், ஐ.டி. ஊழியர்கள். இப்படி ஓய்வின்றி ஓடும் இவர்களுள் பலர் இளம் வயதில் மாரடைப்பு மற்றும் இதய நோய்க்கு ஆளாவதாக கூறுகிறது, உலக சுகாதார அமைப்பு. ஆனால் எது இப்படி இருந்தாலும், இந்தியாவில் போதிய வேலை வாய்ப்பு இல்லை என்பதால் தங்களுக்கு வேலை வழங்கும் வெளிநாட்டு நிறுவனங்களை திருப்தி படுத்தினால் தான் வேலை நிச்சயம் ... என தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர், ஐடி ஊழியர்கள்.

Next Story

மேலும் செய்திகள்