இஸ்ரேல் - பாலஸ்தீனம் மோதல் காட்சிகள் - டிக் டாக்கில் பதிவேற்றப்படும் வீடியோக்கள்

இஸ்ரேல் பாலஸ்தீனுக்கு இடையே தொடரும் ராணுவ தாக்குதல் காட்சிகள், அதிகளவில் டிக் டாக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.
இஸ்ரேல் - பாலஸ்தீனம் மோதல் காட்சிகள் - டிக் டாக்கில் பதிவேற்றப்படும் வீடியோக்கள்
x
இஸ்ரேல் பாலஸ்தீனுக்கு இடையே தொடரும் ராணுவ தாக்குதல் காட்சிகள், அதிகளவில் டிக் டாக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.

ஆடல், பாடல் என, சாமானிய மக்களையும்,  திரை பிரபலங்கள் போல் வலம் வர வைத்து பிரபலமடைந்த டிக் டாக் செயலி, தற்போது உலக அரசியலை பேசும் இடமாக மாற தொடங்கியுள்ளது. 

இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள இந்த செயலிக்கு தற்போது உலகெங்கும் சுமார் 70 கோடி பயனாளிகள் உள்ளனர்.

இந்நிலையில், இஸ்ரேல் - பாலஸ்தீனுக்கு இடையே தொடரும் மோதலை வெட்ட வெளிச்சமாக்கும் இடமாக தற்போது மாறியுள்ளது, டிக் டாக்....

இரு தரப்பு மக்களும், அங்கு தொடரும் வன்முறை சம்பவங்கள், ராக்கெட், குண்டு வீச்சு தாக்குதல்கள் தொடர்பான வீடியோக்களை மாறி மாறி டிக் டாக்கில் பதிவேற்றி வருகின்றனர். 

காசா பகுதியில் இஸ்ரேல் போர் விமானங்கள் நடத்திய தாக்குதல் தொடர்பான வீடியோ ஒன்றை அமெரிக்காவை சேர்ந்த செய்தி தளம் ஒன்று டிக்-டாக்கில் வெளியிட்டது. 

இந்த வீடியோவை உலகெங்கும் இதுவரை சுமார் 4 புள்ளி 4 கோடி பேர் டிக்-டாக்கில் பார்த்துள்ளனர்.

இதே போல், காசா பகுதியில் பல மாடி கட்டிடம் இடிந்து நொறுங்குவது, மக்கள் அலறி கதறுவது, பாலஸ்தீன பெண் ஒருவரை இஸ்ரேலிய ராணுவ வீரர் பாதுகாப்பது என இரு தரப்பினரும் மாறி மாறி பதிவேற்றிய  வீடியோக்களை லட்சக்கணக்கான  பார்வையாளர்கள் பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில், இஸ்ரேல் எடுக்கும் முயற்சிக்கு எதிராக பல பாலஸ்தீனிய ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் குரல் கொடுத்து வரும் நிலையில், 

வன்முறை மற்றும் வெறுப்பை தூண்டும் வீடியோக்களை நீக்குமாறு பேஸ்புக் மற்றும் டிக் - டாக் நிறுவனங்களுக்கு 
வேண்டுகோள் விடுத்துள்ளது, இஸ்ரேல்.

சமூக ஊடகங்கள் மூலம் வெறுப்பு பிரசாரம் பரப்பப்படுவது கவலை தரக்கூடிய ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. 


Next Story

மேலும் செய்திகள்