ஹமாஸ் தலைவர் வீட்டின் மீது தாக்குதல்; இஸ்ரேல் படைகள் குண்டு மழை பொழிந்தன

பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பின் தலைவர் வீட்டை குறிவைத்து இஸ்ரேலிய படைகள் குண்டு வீசி தாக்குதல் நடத்தின.
ஹமாஸ் தலைவர் வீட்டின் மீது தாக்குதல்; இஸ்ரேல் படைகள் குண்டு மழை பொழிந்தன
x
பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பின் தலைவர் வீட்டை குறிவைத்து இஸ்ரேலிய படைகள் குண்டு வீசி தாக்குதல் நடத்தின.இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினர் இடையே கடந்த சில நாட்களாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்நிலையில் காசாபகுதியில் உள்ள சர்வதேச ஊடக நிறுவனங்களின் அலுவலகங்கள் மீதும் இஸ்ரேலிய படைகள் குண்டு வீசி தாக்கின. ஹமாஸ் அமைப்பின் தலைவர் குடியிருக்கும் பகுதியை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு பதிலடியாக காசா பகுதியிலிருந்தும் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரை குறிவைத்து குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்