கட்டுப்பாட்டை இழந்த சீன ராக்கெட் - பூமியை வந்தடையும் என எதிர்பார்ப்பு

விண்வெளிக்கு சீனா அனுப்பிய ராக்கெட் ஒன்று கட்டுபாட்டை இழந்து பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கும் நிலையில், நாளை அது எங்கு விழுந்து நொறுங்கும் என்பது நீடிக்கும் கேள்வியாக உள்ளது.
கட்டுப்பாட்டை இழந்த சீன ராக்கெட் - பூமியை வந்தடையும் என எதிர்பார்ப்பு
x
கடந்த ஏப்ரல் 29 ஆம் தேதி, விண்வெளிக்கு சீனா அனுப்பிய லாங் மார்ச் 5பி என்ற ராக்கெட், தற்போது முற்றிலும் செயலிழந்து பூமியை நோக்கி வந்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நாளை அல்லது நாளை மறுநாள் இந்த ராக்கெட் பூமியை வந்தடையும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில், இதனை ராணுவ ஏவுகணை மூலம் சுட்டு அழிக்கும் திட்டம் எதுவுமில்லை என அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். பொதுவாக ராக்கெட் யாருக்கும் பாதிப்பு ஏற்படுத்தாமல் கடலில் விழுந்து நொறுங்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கடந்த ஆண்டு இதே போல் செயலிழந்த சீன ராக்கெட் ஒன்று நியுயார்க் நகரின் மேலே பறந்து, பின்னர் அட்லாண்டிக் கடலில் விழுந்து நொறுங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்