ஆராய்ச்சிக்காக விண்வெளி சென்ற வீரர்கள் - ஸ்பேஸ் எக்ஸ் மூலம் பூமி திரும்பினர்

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலத்தின் மூலம் நான்கு விண்வெளி வீரர்கள், பத்திரமாக பூமிக்கு திரும்பினர்.
ஆராய்ச்சிக்காக விண்வெளி சென்ற வீரர்கள் - ஸ்பேஸ் எக்ஸ் மூலம் பூமி திரும்பினர்
x
ஆராய்ச்சிக்காக விண்வெளி சென்ற வீரர்கள் - ஸ்பேஸ் எக்ஸ் மூலம் பூமி திரும்பினர் 

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலத்தின் மூலம் நான்கு விண்வெளி வீரர்கள், பத்திரமாக பூமிக்கு திரும்பினர்.அமெரிக்காவின் புளாரிடா மாகானத்திற்கு அருகே, மெக்சிகோ வாளைகுடா கடல் பகுதியில் நேற்று இரவு இந்த விண்கலம் பத்திரமாக தரையிறங்கியது. அமெரிக்காவின் நாசா நிறுவனத்தை சேர்ந்த மூன்று விண்வெளி வீரர்களும், ஜப்பானை சேர்ந்த ஒரு விண்வெளி வீரரும் தரையிறங்கினர். இவர்கள் நால்வரும் சென்ற வருடம் நவம்பர் மாதத்தில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பட்டனர்.நாசா நிறுவனத்துடன் வணிக ரீதியாக உறவு கொண்டுள்ள ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் விண் கலன்கள் மற்றும் ராக்கெட்டுகளை, பல நாடுகள் விண்வெளி பயணங்களுக்கும், செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தவும் கட்டணங்களின் அடிப்படையில் பயன்படுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்