இந்தியாவில் கொரோனா பரவல்-ஆண்டனி ஃபாசி கருத்து

அமெரிக்க அதிபரின் மருத்துவ ஆலோசகர் ஆண்டனி ஃபாசி, இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றால் நிலவியுள்ள அசாத்திய சூழ்நிலை குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா பரவல்-ஆண்டனி ஃபாசி கருத்து
x
இந்தியாவில் கொரோனா பரவல்-ஆண்டனி ஃபாசி கருத்து 

அமெரிக்க அதிபரின் மருத்துவ ஆலோசகர் ஆண்டனி ஃபாசி, இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றால் நிலவியுள்ள அசாத்திய சூழ்நிலை குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றை ஒழிக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும், நிச்சயம் தொற்றுப் பரவலில் இருந்து விடுபடலாம் என்றும் ஆண்டனி ஃபாசி நம்பிக்கை தெரிவித்தார்.மேலும், இதை ஓர் போர் என்று குறிப்பிட்ட அவர், இந்தப் போரில் எதிரியாக இருப்பது கொரோனா வைரஸ் என்று கூறினார்.அத்துடன், கொரோனாவுக்கு ஏழை பணக்காரர் என்ற பாகுபாடு தெரியாது என்று தெரிவித்த அவர், அதன் பாதிப்பை உணரவில்லை என்றால் மிகத்தீவிரமான சிக்கலில் மாட்ட வேண்டியிருக்கும் என்று எச்சரித்தார்.அத்துடன் சில வாரங்கள் தொடர் ஊரடங்கு விதித்தால், கொரோனா தொற்றுப் பரவலுக்கு எதிரான போராட்டத்தில், நல்ல பலன் கிடைக்கும் என்று தெரிவித்தார்.மேலும் நாட்டில் நிலவியுள்ள ஆக்சிஜன் தட்டுப்பாட்டைப் போக்க அவசர குழு ஒன்று நியமிக்கப்பட வேண்டும் என்று கூறிய அவர், உதவிக்கு உலக சுகாதார அமைப்பில் உள்ள நாடுகளைத் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்