விண்வெளியில் ஆராய்ச்சிநிலையம் அமைக்கும் சீனா - 2022 -க்குள் கட்டுமானத்தை முடிக்க திட்டம்

விண்வெளியில் ஒரு ஆராய்ச்சி மையம், அமைக்க தேவையான முதல் கட்ட தளவாடங்களை சீனா ராக்கெட் மூலம் இன்று ஏவியுள்ளது.
விண்வெளியில் ஆராய்ச்சிநிலையம் அமைக்கும் சீனா - 2022 -க்குள் கட்டுமானத்தை முடிக்க திட்டம்
x
அதன் முதல் கட்ட கட்டுமான தளவாடங்களை, லாங் மார்ச் 5பி என்ற ராக்கெட் மூலம், வெங்சாங் நகரில் உள்ள ஏவுதளத்தில் இருந்து இன்று காலை விண்ணில் வெற்றிகரமாக செலுத்தியது. இதில் விண்வெளி வீரர்கள் தங்கும் இடங்கள் மற்றும் அவரக்ளுக்கு தேவையான உயிர் காக்கும் உபகரணங்கள் அனுப்பப்பட்டன. வரும் மாதங்களில் சுமார் 11 முறை இது போன்ற துணைக் கலன்கள் மற்றும் உபரகரணங்களை ராக்கெட் மூலம் அனுப்பி, 2022 ஆம் ஆண்டில் இந்த விண்வெளி நிலையத்தின் கட்டுமானத்தை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விண்வெளி நிலையம், பூமியில் இருந்து 400 முதல் 450 கிலோ மீட்டர்கள் உயரத்தில் நிலை சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளது. இதன் ஆயுட் காலம் சுமார் 15 வருடங்களாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையத்தில் பலவேறு வகையான விஞ்ஞான
ஆய்வுகள் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்