120 ஆக்சிஜன் செறிவூட்டிகள் - பிரிட்டனில் இருந்து இந்தியா வருகை

பிரிட்டனில் இருந்து மேலும் 120 ஆக்சிஜன் செறிவூட்டிகள் டெல்லி வந்தடைந்தன
120 ஆக்சிஜன் செறிவூட்டிகள் - பிரிட்டனில் இருந்து இந்தியா வருகை
x
நாடு முழுவதும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மருத்துவமனைகளில் ஆக்சிஜன் மற்றும் கொரோனா மருந்து பற்றாக்குறை நிலவுகிறது. இந்நிலையில், ஏற்கனவே கடந்த செவ்வாய்க்கிழமை முதற்கட்டமாக வெண்டிலேட்டெர்கள், ஆக்சிஜன் செறிவூட்டிகள் ஆகியவை பிரிட்டனில் இருந்து வந்தடைந்த நிலயில், இன்று 2ம் கட்டமாக 120 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வந்தடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

இந்தியாவுக்கு ஜெர்மனி உதவிக்கரம் - 1000 ஆக்சிஜன் செறிவூட்டிகளை அனுப்பியது

ஜெர்மனி இந்தியாவுக்கு அனுப்பிய ஆயிரம் ஆக்சிஜன் செறிவூட்டிகள் டெல்லியை வந்தடைந்தது. கொரோனா 2-வது அலையில் சிக்கியுள்ள இந்தியாவுக்கு உதவி செய்வதாக கூறிய ஜெர்மனி முதல்கட்டமாக ஆக்சிஜன் செறிவூட்டிகளை அனுப்பியுள்ளது. இத்தகவலை தன்னுடைய டுவிட்டரில் வெளியிட்டுள்ள மத்திய சிவில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஹரதீப் சிங் பூரி, சிவில் விமானத்துறையில் ஒவ்வொருவரும் இடைவிடாத போராட்டத்தில் அர்த்தமுள்ள பங்களிப்பை செய்கிறார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்