"தடுப்பூசி தயாரிக்க அமெரிக்கா உதவும்"- பைடன்

ரெம்டெசிவிர் உள்ளிட்ட அனைத்து மருத்துவப்பொருள்களும், இந்தியாவிற்கு உடனடியாக அனுப்ப உள்ளதாக, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி தயாரிக்க அமெரிக்கா உதவும்- பைடன்
x
வெள்ளை மாளிகையில் இது குறித்து அவர் பேசியபோது,  இந்தியாவில் நிலவி வரும் கொரோனா தொற்று நெருக்கடி குறித்து, நீண்ட நேரம் பிரதமர் மோடியுடன் பேசியதாக கூறியுள்ளார். கொரோனா தொற்றின் ஆரம்ப காலத்தில் அமெரிக்கா சிரமப்பட்டபோது, இந்தியா உதவி செய்ததாகவும், அதுபோலவே, இந்தியாவுக்கு  இந்த நேரத்தில் உதவ அமெ​ரிக்காக தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். தேவையான மருத்துவ உயிர் காக்கும் பொருட்கள் மற்றும் உபகரணங்களை அனுப்புவது உட்பட அனைத்து உதவிகளையும் இந்தியாவுக்கு வழங்குவதாக பைடன் உறுதியளித்துள்ளார்.
ரெம்டெசிவிர் மருந்து உள்ளிட்டவற்றை இந்தியாவிற்கு உடனடியாக அனுப்ப உள்ளதாகவம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உறுதியளித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்