2021ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள் அறிவிப்பு: சிறந்த நடிகர், நடிகை, இயக்குநர் யார்?

ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில், சிறந்த நடிகருக்கான விருதை 83 வயதான ஆண்டனி ஹாப்கின்ஸ் தட்டிச் சென்று உள்ளார்.
2021ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள் அறிவிப்பு: சிறந்த நடிகர், நடிகை, இயக்குநர் யார்?
x


ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில், சிறந்த நடிகருக்கான விருதை 83 வயதான ஆண்டனி ஹாப்கின்ஸ் தட்டிச் சென்று உள்ளார். ஆண்டனி ஹாப்கின்ஸ் இங்கிலாந்தை சேர்ந்த நடிகர் ஆவார். தி ஃபாதர் படத்தில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக இவருக்கு விருது வழங்கப்பட்டு உள்ளது. ஆண்டனி ஹாப்கின்ஸ் விழாவுக்கு வர முடியாததன் காரணத்தால், அவருக்கு பதில் மற்றொருவர் விருதை பெற்றுக் கொண்டார்.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில் சிறந்த நடிகைக்கான விருதை அமெரிக்காவின் பிரான்சஸ் மெக்டோர்மன்ட் பெற்று உள்ளார். நோமட்லேண்ட் படத்தில் நடித்ததற்காக இவருக்கு விருது கிடைத்து உள்ளது. 63 வயதான நடிகை மெக்டோர்மன்ட் வாங்கும், 3-ஆவது ஆஸ்கர் விருது இது என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில், சிறந்த இயக்குநருக்கான விருது, சீனாவை சேர்ந்த 39 வயதான பெண் இயக்குநர், க்ளோயி சாவ்-க்கு வழங்கப்பட்டு உள்ளது. நோமட்லேண்ட் படத்தை இயக்கியதற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டு உள்ளது. 

ஆஸ்கர் விருகள் வழங்கும் விழாவில், சிறந்த சர்வதேச திரைப்படத்துக்கான விருதை அனதர் ரவுண்ட் திரைப்படம் வென்று உள்ளது. இந்த படத்தை டென்மார்க் நாட்டை சேர்ந்த தாமஸ் வின்ட்டர்பர்க் என்பவர் இயக்கி உள்ளார். அனதர் ரவுண்ட் திரைப்படம், வாழ்க்கையில் முன்னேற முயற்சிக்கும் நான்கு நண்பர்களின் வாழ்க்கையை நகைச்சுவையுடன் விவரிக்கும் வகையில் எடுக்கப்பட்டு உள்ளது. 

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில், சிறந்த திரைக்கதைக்கான விருது, பிராமிசிங் யங் உமன் படத்துக்கு கிடைத்து உள்ளது. இந்த படத்தை, இங்கிலாந்தை சேர்ந்த பெண் இயக்குநர் எமரல்டு பென்னல் இயக்கிய நிலையில், அவர் விருதை பெற்றுக் கொண்டார். 

பிரபல இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய டெனட் படத்துக்கு ஆஸ்கர் விருது கிடைத்து உள்ளது. சிறந்த விஷ்வல் எஃபக்ட் படமாக இந்த படம் தேர்வாகி உள்ளது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில், படத்தின் விஷ்வல் எஃபக்ட் கலைஞர் ஸ்காட் ஃபிஷர் விருதை பெற்றுக் கொண்டார்.

ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில் சிறந்த தழுவல் கதைகான விருதை தி ஃபாதர் திரைப்படம் பெற்று உள்ளது. மனநலம் பாதிக்கப்பட்ட வயதான தந்தைக்கும், மகளுக்கும் இடையேயான பாசப்பிணைப்பை பறைசாற்றும் வகையில் எடுக்கப்பட்ட இந்த படத்துக்கு விருது கிடைத்து உள்ளது,

Next Story

மேலும் செய்திகள்