கோவிஷீல்டு மூலப்பொருள் ஆதாரம் கண்டுபிடிப்பு; இந்தியாவுக்கு கிடைக்க வழிவகை செய்யப்படும் - அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் உறுதி

இந்தியாவில் கொரோனா தொற்று பரவலின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கோவிஷீல்டு மூலப்பொருள் ஆதாரம் கண்டுபிடிப்பு; இந்தியாவுக்கு கிடைக்க வழிவகை செய்யப்படும் - அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் உறுதி
x
இந்தியாவில் கொரோனா தொற்று பரவலின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த உலக நாடுகள் ஆதரவு கரம் நீட்டி வருகின்றன. இந்நிலையில், அமெரிக்க நாட்டின் பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன், இந்திய நாட்டின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். கொரோனாவின் கோரப்பிடியில் தவிக்கும் இந்தியாவுக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்த அவர், கோவிஷீல்டு தடுப்பூசி உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களின் ஆதாரங்களை அமெரிக்கா கண்டறிந்துள்ளதாகவும், அவை உடனடியாக இந்தியாவுக்கு கிடைக்க வழிவகை செய்யப்படும் என்றும் உறுதியளித்தார். 

Next Story

மேலும் செய்திகள்