"கார்பன் வெளியேற்றம்-குறைக்க நடவடிக்கை" - பருவநிலை உச்சி மாநாட்டில் ஜோ பைடன் தகவல்

2030ஆம் ஆண்டுக்குள் பசுமை இல்ல வாயுகள் வெளியேற்றத்தை 52 சதவீதம் அமெரிக்கா குறைக்கும் என்று ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
கார்பன்  வெளியேற்றம்-குறைக்க நடவடிக்கை - பருவநிலை உச்சி மாநாட்டில் ஜோ பைடன்  தகவல்
x
40 உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் பருவநிலை மாற்றம் பற்றிய உச்சி மாநாட்டில், காணொலி மூலம் உரையாற்றிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், 2030ஆம் ஆண்டுக்குள் பசுமை இல்ல வாயுக்கள் வெளியேற்றத்தை அமெரிக்கா, 50 முதல் 52 சதவீதம் குறைக்கும் என்று அறிவித்துள்ளார்.  2024 ஆம் ஆண்டுக்குள்  பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த தேவையான நிதி உதவியை அமெரிக்கா இரண்டு மடங்காக அதிகரிக்கும் என்றும் ஜோ பைடன் கூறியுள்ளார். 2030க்குள் கார்பன்  வெளியேற்றத்தை சீனா குறைக்க தொடங்கும் என்று சீன அதிபர் ஷி ஜின்பிங் இந்த மாநாட்டில் பேசும் போது கூறினார். பருவநிலை மாற்றம் தொடர்பாக அமெரிக்காவுடன் இந்தியா ஒரு கூட்டு முயற்சியை தொடங்கும் என்று இந்தியப் பிரதமர் மோடி, தனது உரையில் கூறினார். இரு நாடுகளும் இணைந்து புதிய முதலீடுகளை திரட்டவும், பசுமை தொழில்நுட்பங்களில் இணைந்து செயல்படவும் திட்டமிட்டள்ளதாக மோடி கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்