மனித மூளையில் சிப்-இயந்திரத்துடன் இணைப்பு - அற்புதமா?ஆபத்தா?
பதிவு : ஏப்ரல் 22, 2021, 01:07 PM
மனித மூளையை சிப் மூலமாக இயந்திரத்துடன் இணைக்கும் நியூராலிங்க் திட்டம் குரங்கிடம் நடத்தப்பட்ட சோதனையில் வெற்றியடைந்துள்ள நிலையில் இது பற்றிய செய்தித் தொகுப்பைப் பார்க்கலாம்...
மனித மூளையை சிப் மூலமாக இயந்திரத்துடன் இணைக்கும் நியூராலிங்க் திட்டம் குரங்கிடம் நடத்தப்பட்ட சோதனையில் வெற்றியடைந்துள்ள நிலையில் இது பற்றிய செய்தித் தொகுப்பைப் பார்க்கலாம்...

அறிவியல் திறன் எத்தனை அபாரமானது.அசாத்தியமானவற்றையும் சாத்தியமாக்கும் அற்புத வரப்பிரசாதம்.

ஆனால் அறிவியல் நன்மைக்குத்தான் என்றாலும், மனிதர்களின் பேராசையால் அதற்கு கோரமுகமும் உண்டு.

அந்த வகையில், இந்த நியூராலிங்க் தொழில்நுட்பத் திட்டம் வரமா சாபமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது

தனியார் விண்வெளி நிறுவனம் ஸ்பேஸ் எக்சின் நிறுவனர் எலான் மஸ்க்-இன் மற்றொரு நிறுவனம்தான் நியூராலிங்க். மனித மூளையில் சிப் பொருத்தி மனிதனை இயந்திரத்தோடு இணைக்கும் தொழில்நுட்பமே நியூராலிங்க் திட்டம்...

பேஜர் என்னும் மக்காக் இன வகையைச் சேர்ந்த 9 வயது குரங்கிற்கு மூளையின் இரு புறங்களிலும் 6 வாரத்திற்கு முன்பு சிப் ஒன்றை பொருத்தியுள்ளனர்...

கணினியைக் கற்றுக் கொண்ட அந்தக்குரங்கு, வீடியோ கேம் ஒன்றை ஜாய் ஸ்டிக் உதவியுடன் விளையாடுகிறது... பந்தை ஆரஞ்சு நிறப் பெட்டிக்குள் போடும் போதெல்லாம் அதற்கு வாழைப்பழக் கூழ் வழங்கப்படுகிறது...

குரங்கு ஆரஞ்சு பெட்டிக்குள் பந்தை போடுகையில், அதன் மூளையில் உருவாகும் சமிஞ்சைகள் மூளையில் பொருத்தப்பட்டுள்ள சிப் மூலமாகக் கணிணிக்குக் கடத்தப்படுகின்றன. ஜாய் ஸ்டிக்கை அசைப்பதற்கு குரங்கின் மூளை இட்ட கட்டளைகளை விஞ்ஞானிகள் கணினி ப்ரோகிராமாக மாற்றி அதை சிப்பில் பதிய வைக்கின்றனர்...

இதனால் குரங்கு தான் நினைத்தவுடனேயே, ஜாய் ஸ்டிக்கின் உதவி இல்லாமலேயே ஆரஞ்சுப் பெட்டிக்குள் பந்தைப் போட முடிகிறது... மனிதர்களின் மூளையில் ஒரு சிறிய துளையிட்டு, இந்த சிப்பை எளிதாகப் பொருத்தி விடலாம்... இந்த சிப்பில் இருக்கும் 3000 எலக்ட்ரோட்கள் மூளையுடன் இணைக்கப்படும்... 

இதனால் மனித குலத்திற்கு விளையப்போகும் நன்மைகளைப் பற்றி இலான் மஸ்க் பட்டியலிடுகிறார்... அதன்படி, இந்த தொழில்நுட்பத்தின் மூலம் பக்கவாதம், நரம்புத் தளர்ச்சி ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மூளையில் இந்த சிப் கருவியைப் பொருத்துவதால், கணினியின் உதவியுடன் ஸ்மார்ட் ஃபோனை இயக்குவது, மற்றும் செயற்கை உறுப்புகளை மூளையின் கட்டளைக்கேற்ப தானாக இயக்கி எல்லா விஷயங்களையும் மற்றவர்களின் உதவி இல்லாமலேயே செய்து கொள்வது உள்ளிட்ட அசாத்தியமான விஷயங்களைச் சொல்லி ஆச்சரியப்பட வைக்கிறார்... 

இதையும் தாண்டி இந்தத் தொழில்நுட்பம் மூலம் மனிதர்களின் நினைவுகளை பிரதி எடுத்து, கடந்த காலத்தில் நடந்தவற்றை திரைப்படத்தைப் பார்ப்பதைப் போல ஓட்டிப் பார்க்க முடியும்... கேட்கவே தலை கிறுகிறுக்க வைக்கிறதல்லவா???

எல்லாம் சரிதான்... நியூராலிங்க் போன்ற திட்டங்கள் நனவாவதால் மனிதர்களின் மூளை இயற்கைக்கு முரணாக எந்திரத்தால் கட்டுப்படுத்தப்படும் நிலை வந்து, எந்த ஒரு உடல் உழைப்பும் இல்லாமல் நாம் இன்னும் உடல் உபாதைகளுக்கு ஆளாக நேரிடும் என்றும் சந்தேகம் வருகிறது...

மனிதர்கள் இயந்திரங்களைக் கட்டுப்படுத்தும் காலம் போய், மனிதர்களை இயந்திரங்கள் கட்டுப்படுத்தும் காலம் வந்து விட்டதை நினைத்தால் தான் இனம் புரியா பயம் ஏற்படுகிறது...
பொறுத்திருந்து பார்க்கலாம்... இந்தப் புதிய கண்டுபிடிப்பு அற்புதமா... ஆபத்தா என்று...

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

6285 views

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

949 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

314 views

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

121 views

மீண்டும் ஆட்சியமைக்கும் பினராயி விஜயன் - ஆளுநரை சந்தித்து நேரில் கடிதம் கொடுத்தார்

கேரள சட்டப்பேரவையில், வெற்றி பெற்றதையடுத்து, தமது முதல்வர் பதவியை பினராயி விஜயன் ராஜினாமா செய்துள்ளார்.

14 views

பிற செய்திகள்

உலகின் மிகவும் வயதான பெண்மணி ஒலிம்பிக் சுடர் ஓட்ட நிகழ்வில் பங்கேற்கப் போவதில்லை எனத் தகவல்

ஜப்பானில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் சுடர் ஓட்ட நிகழ்வில், உலகின் மிகவும் வயதான் பெண்மணியான 118 வயதான, கேன் தனாகா பங்கேற்கப் போவதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

84 views

வயது ஒரு தடையல்ல! : 60 ஆனாலும் இளமை ததும்பும் நடனம்... அசத்தும் பெண்கள்

ஜப்பானின் "பாம் பாம்" (Pom pom) எனப்படும் சியர் லீடிங் நடனக்குழுவில் இடம்பெற்றுள்ள, 60 வயது முதல் 89 வயது வரையிலான பெண்கள், இளம் வயதினரைப் போல் துடிப்புடன் நடனமாடி அசத்தி வருகின்றனர்.

44 views

ஜூலை 4-க்குள் 70 % அமெரிக்கர்களுக்கு தடுப்பூசி போட இலக்கு - அதிபர் ஜோ பைடன் தகவல்

ஜூலை 4-க்குள் 70 % அமெரிக்கர்களுக்கு தடுப்பூசி போட இலக்கு - அதிபர் ஜோ பைடன் தகவல்

34 views

கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி இந்தியா நிறுத்தம்; மாற்று நன்கொடையாளர்களை தேடுகிறோம் - சர்வதேச சுகாதார நிறுவனம் தகவல்

கொரோனா தடுப்பூசி ஏற்றுமதியை இந்தியா நிறுத்தியுள்ள நிலையில், அதற்கு பதில் மாற்று நன்கொடையாளர்களை தேடி வருவதாக சர்வதேச சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது,

21 views

கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி நிறுத்தம் - கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி நிறுத்தம்

கொரோனா தடுப்பூசி ஏற்றுமதியை இந்தியா நிறுத்தியுள்ள நிலையில், அதற்கு பதில் மாற்று நன்கொடையாளர்களை தேடி வருவதாக சர்வதேச சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது,.

21 views

மன அழுத்தத்தைப் போக்க நடனமாடி மகிழ்ந்த நியூயார்க்வாசிகள்

அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில், கொரோனா ஊரடங்கால் ஏற்பட்ட மன அழுத்தத்தை போக்கும் பொருட்டு, நியூயார்க் வாசிகள் ஜும்பா நடன வகுப்பிற்கு சென்று நடனமாடி மகிழ்ந்தனர்.

31 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.