ஜார்ஜ் பிளாய்டு கொலை வழக்கு - 12.5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு

அமெரிக்காவில் கருப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்டு கொல்லப்பட்டது தொடர்பான வழக்கில் முன்னாள் போலீஸ் அதிகாரிக்கு பன்னிரன்டரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
ஜார்ஜ் பிளாய்டு கொலை வழக்கு - 12.5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு
x
அமெரிக்காவில் கருப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்டு கொல்லப்பட்டது தொடர்பான வழக்கில் முன்னாள் போலீஸ் அதிகாரிக்கு பன்னிரன்டரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.

அமெரிக்காவின் மின்னியாபோலிஸ் நகரில், கடந்த ஆண்டு கருப்பினத்தை சேர்ந்த ஜார்ஜ் பிளாய்டு என்பவரை, போலீஸ் அதிகாரி ஒருவர் கழுத்தில் அழுத்தியதால், அவர் உயிரிழந்தார். சர்வதேச அளவில் இந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இதனைக் கண்டித்து அமெரிக்காவில் பல்வேறு போராட்டங்கள் நடந்தன. ஜார்ஜ் பிளாய்டு கொல்லப்பட்டது தொடர்பான வழக்கு மின்னசொட்டா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில், ஜார்ஜ் பிளாய்டை கழுத்தில் அழுத்திய முன்னாள் போலீஸ் அதிகாரி டெரீக் சாயுவினை, மின்னசொட்டா நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்து உள்ளது. மேலும், அவருக்கு பன்னிரன்டரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்