இங்கிலாந்து இளவரசர் பிலிப் உடல் அரச மரியாதையுடன் நல்லடக்கம்

மறைந்த இங்கிலாந்து இளவரசர் பிலிப்பின் உடல், அரச மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இங்கிலாந்து இளவரசர் பிலிப் உடல் அரச மரியாதையுடன் நல்லடக்கம்
x
மறைந்த இங்கிலாந்து இளவரசர் பிலிப்பின் உடல், அரச மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவரும், இளவரசருமான பிலிப், கடந்த 9-ஆம் தேதி, உயிரிழந்தார். அவரது உடல் இங்கிலாந்தின் வின்ஸ்டர் கோட்டையில் வைக்கப்பட்டு இருந்த நிலையில், இறுதிச்சடங்குகள் நேற்று நடைபெற்றன. இதற்காக அவரது உடல், புனித ஜார்ஜ் தேவாலயத்துக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. கொரோனா அச்சத்தால், மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருந்த நிலையில், கருப்பு உடை அணிந்து, அரச குடும்பத்தினர் மட்டும் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து, அவரது உடல் தேவாலயத்து கொண்டு செல்லப்பட்டு,  ராணி எலிசபெத் உள்ளிட்ட அரச குடும்பத்தினர் முன்னிலையில் இறுதிச்சடங்குகள் நடந்தன. பின்னர், தேவாலயத்தின் அடிப்பகுதியில் உள்ள  ராயல் வால்ட் கல்லறைப் பகுதியில், இளவரசர் பிலிப்பின் உடல், நல்லடக்கம் செய்யப்பட்டது.




Next Story

மேலும் செய்திகள்