பாகிஸ்தானில் தொடரும் போராட்டம்: "பிரான்ஸ் நாட்டவர்கள் வெளியேறவும்" - பிரான்ஸ் தூதரகம் உத்தரவு

பாகிஸ்தானில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்ததில் 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானில் தொடரும் போராட்டம்:  பிரான்ஸ் நாட்டவர்கள் வெளியேறவும் -  பிரான்ஸ் தூதரகம் உத்தரவு
x
முகமது நபியின் கேலிச்சித்திர விவகாரத்தில் பிரான்ஸ் தூதரை வெளியேற்றவில்லை எனில் போராட்டம் நடத்தப்படும் என எச்சரித்த பாகிஸ்தான் மத குரு ரிஸ்வியை அந்நாட்டு போலீசார் கைது செய்து உள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவருடைய ஆதரவாளர்கள் தரப்பில் பாகிஸ்தானில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. கராச்சியில் போராட்டம் நடத்தியவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே கடும் மோதல் வெடித்துள்ளது.  இதற்கிடையே பாகிஸ்தானில் இருந்து பிரான்ஸ் நாட்டவர்கள் வெளியேறுமாறு அந்நாட்டு தூதரகம் உத்தரவிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்