கொரோனா 2வது அலை தீவிரம் எதிரொலி - போரிஸ் ஜான்சனின் இந்திய பயணத் திட்டத்தில் மாற்றம்

கொரோனா இரண்டாவது அலை அதிவேகமாக பரவி வருவதால் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியாவில் தங்கியிருக்கும் நேரத்தை குறைத்துக் கொண்டார்.
கொரோனா 2வது அலை தீவிரம் எதிரொலி - போரிஸ் ஜான்சனின் இந்திய பயணத் திட்டத்தில் மாற்றம்
x
இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையேயான யான நட்புறவை வலுப்படுத்தும் விதமாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மூன்று நாள் பயணமாக ஏப்ரல் 26ம் தேதி இந்தியா வர திட்டமிட்டிருந்தார். அவரது இந்திய வருகையின்போது, வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பருவநிலை மாற்றம் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தை இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்தநிலையில், இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமடைந்து வருவதால் இந்தியாவில் தங்கியிருக்கும் நேரத்தை குறைத்துக் கொள்ள போரிஸ் ஜான்சன் முடிவு செய்துள்ளார். இந்த தகவலை தெரிவித்த அவரது செய்தி தொடர்பாளர், ஜான்சனின் பயணத் திட்டம் குறித்து விரைவில் அறிவிப்போம் என்றார். கடந்த ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தின நிகழ்வில் பங்கேற்க இந்தியா வருவதாக இருந்த போரிஸ் ஜான்சனின் பயணம், இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா தாக்கம் காரணமாக ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்