"ஸ்புட்னிக் - வி" தடுப்பூசி உற்பத்தியை உயர்த்த திட்டம்

ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கு அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
ஸ்புட்னிக் - வி தடுப்பூசி உற்பத்தியை உயர்த்த திட்டம்
x
இந்தியாவில் கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய இரண்டு தடுப்பூசிகள் கொரோனாவுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இருப்பினும், இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அவசர கால பயன்பாட்டுக்கு, ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த இந்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் அனுமதி அளித்துள்ளது.

பல்வேறு நாடுகளில் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், 60 வது நாடாக இந்தியாவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. புகழ்பெற்ற மருந்து உற்பத்தி நிறுவனமான ரெட்டிஸ் நிறுவனத்துடன் இணைந்து ஸ்புட்னிக்-வி தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க ரஷ்யா முடிவெடுத்து உள்ளது. கிளாண்ட் பார்மா, பனாசியா பயோடெக் உள்ளிட்ட பல நிறுவனங்களுடனும் தடுப்பூசி தயாரிக்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்மூலம், ஆண்டுக்கு 85 கோடி தடுப்பூசியை உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை சேமிக்க பிரத்யேக குளிர்பதன கட்டமைப்பு தேவைப்படாது என்றும், 2 முதல் 8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் சேமித்து வைக்க முடியும் என்றும் கூறப்படுகிறது.  ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் விலை 800 ரூபாய்க்கும் குறைவான விலையில் கிடைக்கும் என்றும், விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்