"ஸ்மார்ட் போன் தயாரிப்பை நிறுத்துகிறோம்" - எல்.ஜி நிறுவனம் அறிவிப்பு

ஸ்மார்ட் போன் தயாரிப்பில் இருந்து வெளியேறுவதாக எல்.ஜி. நிறுவனம் அறிவித்துள்ளது.
ஸ்மார்ட் போன் தயாரிப்பை நிறுத்துகிறோம் - எல்.ஜி நிறுவனம் அறிவிப்பு
x
ஸ்மார்ட் போன் தயாரிப்பில் இருந்து வெளியேறுவதாக எல்.ஜி. நிறுவனம் அறிவித்துள்ளது. பிரபல செல்போன் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான எல்.ஜி. நிறுவனம் கடந்த 2015 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் இருந்து நஷ்டத்தையே எதிர்க்கொண்டு வந்தது. கடந்த ஆறு ஆண்டுகளாக நிறுவனத்தின் நஷ்டம் மட்டும் 33 ஆயிரம் கோடி ரூபாயை தாண்டி சென்றுள்ளது.  இந்தநிலையில் வரும் ஜூலை 31-ம் தேதியில் இருந்து ஸ்மார்ட் போன் தயாரிப்பை நிறுத்துவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இருப்பினும் கையில் இருக்கும் ஸ்மார்ட் போன்களின் விற்பனை தொடர்ந்து நடைபெறும் என்றும் குறிப்பிட்ட காலத்திற்கு வாடிக்கையாளர்களுக்கான சாப்ட்வேர் அப்டேட் உள்ளிட்ட சேவைகளை தொடர்ந்து வழங்குவோம் என்றும் அறிவித்துள்ளது.

ஏற்கனவே எல்.ஜி. நிறுவனம் சில ஊழியர்களை தொலைபேசி பிரிவில் இருந்து வணிகப்பிரிவுக்கு மாற்றிவிட்டதாக தகவல்கள் வெளியாகிய நிலையில், வேலையிழப்பு விவகாரத்தில் பிராந்திய அளவில் தீர்வு காணப்படும் என நிறுவனம் அறிவித்துள்ளது. ஸ்மார்ட் போன் தயாரிப்பில் இருந்து வெளியேறுவதாக அறிவித்திருக்கும் எல்ஜி நிறுவனம் மின்சார கார்கள் தயாரிப்பு, ஸ்மார்ட் வீடுகள், செயற்கை நுண்ணறிவு மற்றும் வணிக தொழில்நுட்ப தீர்வு துறைகளில் கவனம் செலுத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்