தரிசாக கிடந்த மலைப் பகுதி - செழிப்பாய் மாற்றிய இயற்கைப் போராளி

தரிசாக கிடந்த மலைப்பகுதியை 24 வருட கடின உழைப்பால் செழிப்பாக மாற்றிக் காண்பித்திருக்கும் தனி ஒருவர்.
தரிசாக கிடந்த மலைப் பகுதி - செழிப்பாய் மாற்றிய இயற்கைப் போராளி
x
தரிசாக கிடந்த மலைப்பகுதியை 24 வருட கடின உழைப்பால் செழிப்பாக மாற்றிக் காண்பித்திருக்கும் தனி ஒருவர்... அவர் யார் என்பதை விரிவாக பார்க்கலாம்..

ஒரு காலத்தில் இவர் செய்யும் காரியங்களைப் பார்த்து கிராம மக்கள் இவரைப் பைத்தியம் என்று கை கொட்டி சிரித்தனர்... இந்த மனிதன் தான் வறண்ட மலைக்கு மறுவாழ்வு கொடுக்கப்போகும் இயற்கைப் போராளி என்று அவர்களுக்கு அப்போது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. 

வறட்சியால் பாதிக்கப்பட்டிருந்த மலைப்பகுதிகளில், 24 ஆண்டுகளாகத் தன் கடும் முயற்சியால் தரிசாகக் கிடந்த மலைகளை பச்சைப்பசேலென மாற்றி  நீர் வளங்களை உருவாக்கியுள்ளார் இந்தோனேஷியாவைச் சேர்ந்த 69 வயதான சாடிமான்...

சாதா  தொப்பியுடனும், சஃபாரி சட்டையுடனும் வலம் வரும் சாடிமேன் தனக்கிருந்த உயர்ந்த லட்சியமே மரங்களை நட்டு, நீர்வளத்தைப் பாதுகாத்து மக்களுக்கு உதவ வேண்டும் என்பது மட்டும்தான் என்று வாஞ்சையாகக் கூறுகிறார்...

பைத்தியம் என்று அழைத்த அதே கிராம மக்கள் தான் தற்போது அவரை, "மீட்பர் சாடிமேன் " , "சாடிமான் தாத்தா" என்று அன்போடு அழைக்கின்றனர்...

மத்திய ஜாவா மாகாணத்தின் கெண்டால் மற்றும் ஆம்பியாங் மலைப்பகுதிகளில், காட்டுத் தீயால் ஏற்பட்ட பாதிப்பால் இயற்கை வளங்கள் முழுமையாக அழிந்து, நீர்வளங்கள் எல்லாம் வறண்டு கிடந்தன. இந்நிலையில்  2 தசாப்தங்களுக்கும் மேலாக சற்றும் ஓய்வின்றி உழைத்து மரங்களை நட்டு வந்துள்ளார் சாடிமான்...

ஆலமரங்களும், அத்தி மரங்களும் அதிக அளவிலான நீரை சேமித்து வைக்கக் கூடியவையும், மண்ணரிப்பைத் தடுக்கக் கூடியவையும் என்பதால் அவற்றை அதிக அளவில் நட்டு, பசுமையான காடுகளை உருவாக்கியுள்ளதாகக் கூறுகிறார்...

ஆரம்ப காலங்களில் இவரது முயற்சியின் மீது நம்பிக்கை இல்லாததால் யாரும் பண உதவி செய்ய முன்வரவில்லை. சுமார் 617 ஏக்கர் நிலப்பரப்பில், 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆலமரங்கள் மற்றும் அத்தி மரங்களை தன் சொந்த செலவில் நட்டு வளர்த்துள்ளார்...

Next Story

மேலும் செய்திகள்