மியான்மரில் பயங்கரம் - ராணுவ துப்பாக்கி சூட்டில் 114 பேர் படுகொலை

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடிய 114 பேர் ஒரே நாளில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
மியான்மரில் பயங்கரம் - ராணுவ துப்பாக்கி சூட்டில் 114 பேர் படுகொலை
x
மியான்மரில் கடந்த மாதம் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் தொடர் போராட்டங்களை நடத்திவரும் நிலையில், அந்நாட்டு ராணுவம் நேற்று ஆயுதப்படை தினத்தை கொண்டாடியது. அப்போது தன்னெழுச்சியுடன் மக்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்களை நடத்தினர். இதற்கிடையே தொலைக்காட்சி வாயிலாக உரையாற்றிய ராணுவ தலைவர் மின் ஆங் ஹேலிங் போராடினால் தலையில் சுடப்படுவீர்கள் என பகிரங்க மிரட்டல் விடுத்தார். அதன்படியே போராட்டக்காரர்கள் மீது ஆங்காங்கே  ராணுவம் கண்மூடித்தனமாக நடத்திய துப்பாக்கி சூட்டில்,  குழந்தைகள் உள்பட 114 பேர் உயிரிழந்துள்ளனர். காயம் அடைந்த பலர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். உறவுகளை இழந்த மக்கள் பேசுகையில், ராணுவம் தங்களை காக்கை குருவியை போன்று சுட்டு வீழ்த்தியது என கண்ணீருடன் தெரிவித்துள்ளனர். மியான்மரில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியதில் இருந்து 400-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்