ஜெர்மனியில் கொரோனா ​பரவல் 3-ம் அலை - ஏப்ரல் 18 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு

ஜெர்மனியில் வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி வரை கொரோனா ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது
ஜெர்மனியில் கொரோனா ​பரவல்  3-ம் அலை - ஏப்ரல் 18 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு
x
ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு உள்ள 5 நாட்கள் வீடுகளிலேயே தங்கியிருக்க அந்நாட்டு மக்களை ஜெர்மன் அரசு கேட்டுக் கொண்டுள்ளது. மூன்றாவது கட்ட கொரோனா பரவலை தடுக்க மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் கேட்டுக் கொண்டுள்ளார். ஜெர்மனில் உள்ள16 மாகாணங்களின் தலைவர்களை, கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை கடுமையாக பின்பற்ற அவர் அறிவுறுத்தி உள்ளார். பொருளாதார வளர்ச்சிக்காக பல்வேறு துறைகளை திறக்க இம்மாத துவக்கத்தில் முடிவு செய்யப்பட்டதையும் ஒத்திவைக்க மெர்க்கல் கேட்டுக் கொண்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்