வாட்ஸ் அப் - கடந்து வந்த பாதை

தொடர் சிக்கல்களைச் சந்தித்து வரும் வாட்ஸ் அப் செயலி கடந்து வந்த பாதையை சுருக்கமாக பார்க்கலாம்...
வாட்ஸ் அப் - கடந்து வந்த பாதை
x
தொடர் சிக்கல்களைச் சந்தித்து வரும் வாட்ஸ் அப் செயலி கடந்து வந்த பாதையை சுருக்கமாக பார்க்கலாம்...

2009ம் ஆண்டு, பிரையன் ஆக்டன் (Brian Acton), ஜேன் கோம் (Jan Koum ) ஆகிய இரு கணினி நிரலர்களால் வாட்ஸ் அப் உருவாக்கப்பட்டது. இவர்கள் யாஹூ நிறுவனத்தில் பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பல்வேறு சிக்கல்களை சந்தித்து வாட்ஸ் அப் மிக புகழ் பெற்ற செய்தி பரிமாற்று செயலியாக உருப்பெற்றது.

வாட்ஸ் அப் ? (whats up), என்ன நடக்கிறது என்ற ஆங்கில வினைச் சொல்லை அடிப்படையாகக் கொண்டு, ஜேன் கோம் தான் இந்த செயலிக்கு வாட்ஸ் ஆப் என்று பெயரிட்டார். 

பல மாற்றங்களுக்குப் பிறகு, 2009ம் ஆண்டு ஜுன் மாதம், 2 லட்சத்து 50 ஆயிரம் பயனர்களுடன் வாட்ஸ் அப் வெளியிடப்பட்டது.

வாட்ஸ் அப் இதற்கு முன்னால் அதிகம் மேர் விரும்பிப் பயன்படுத்த காரணமாய் இருந்தது, உரையாடலை துவங்குவது முதல், குழுக்கள் அமைப்பது வரை அனைத்து நடைமுறைகளும் மிக எளிமையாக இருந்ததுதான்.

இது ஆரம்பத்தில் இலவச செயலியாக இருந்த நிலையில், அதிவேக வளர்ச்சியைக் குறைப்பதற்காக கட்டண சேவையாக மாற்றப்பட்டு, பின்பு 2 ஆயிரத்து 16ல் மீண்டும் இலவச சேவையாக மாற்றப்பட்டது.

2020ஆம் ஆண்டின் போது, இந்த செயலியை 200 கோடி மக்கள் பயன்படுத்தியிருந்தனர். 

ஃபேஸ்புக் நிறுவனம், வாட்ஸ் அப் நிறுவனத்தை 19.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கொடுத்து கையகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்