அமெரிக்காவில் 3வது கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி

ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் ஒற்றை டோஸ் கொரோனா தடுப்பூசிக்கு அமெரிக்காவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் 3வது கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி
x
ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் ஒற்றை டோஸ் கொரோனா தடுப்பூசிக்கு அமெரிக்காவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டுக்கு வழங்க அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அனுமதியை வழங்கியிருக்கிறது. 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசியை வழங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்கர்களுக்கு தடுப்பூசியை செலுத்தும் பணியை பைடன் நிர்வாகம் தீவிரமாக்கியுள்ளது.

நியூசிலாந்தின் ஆக்லாண்ட் நகரில் பிரிட்டனில் காணப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று பரவல் ஏற்பட்டுள்ளது. ஒரே பகுதியில் 14 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பரவலுக்கான மூலம் தெரியாத நிலையில், அங்கு 7 நாட்கள் முழு ஊரடங்கை பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் அமல்படுத்தியுள்ளார். அவசர தேவையின்றி  மக்கள் வெளியேற வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

கடும் குளிர் மற்றும் கொரோனா பரவலுக்கு மத்தியில் கனடாவின் கியூபெக் நகரில் 5 மாதங்களுக்கு பிறகு திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளன. இருப்பினும் திரையரங்குகளில் உணவு பொருட்களை விற்பனை செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும், இரவு எட்டு மணி வரை மட்டுமே திரையரங்குகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முக கவசத்துடன் உள்ளே வரும் மக்கள், காட்சி முடியும் வரை முக கவசத்தை கழற்ற கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அர்ஜென்டினாவில் விஐபிகள் தங்களுடைய செல்வாக்கை பயன்படுத்தி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட விவகாரம் சர்ச்சையாகியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.  புவெனஸ் ஐரிஸ் நகரில் அதிபர் அலுவலகம் முன்னதாக போராட்டம் நடத்திய மக்கள் "தங்களுடைய தடுப்பூசியை திருப்பி தாருங்கள்" என கோஷம் எழுப்பினர். மேலும் முறைகேட்டில் ஈடுபட்டவர்களை தண்டிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

பிரேசிலில் கொரோனா தொற்று மீண்டும் வேகம் எடுத்துள்ள நிலையில், மாநில கவனர்கள் ஊரடங்கை மீண்டும் அமல்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஊரடங்கை அமல்படுத்தும் மாநிலங்களுக்கு மத்திய தொகுப்பின் உதவி தொகையை நிறுத்த போவதாக அதிபர் போல்சனாரோ எச்சரித்துள்ளார். ஊரடங்கை அமல்படுத்தும் கவனர்கள், தங்கள் மாநிலத்திற்கான உதவி தொகையை தாங்களே வழங்க வேண்டும் எனக் கூறியிருக்கிறார்.  

பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீஸில் ரோயிங் மெஷினில் செய்யப்படும் உடற்பயிற்சிக்கான உலக சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டியில் மக்கள் தங்கள் வீடுகளில் இருந்தவாறே பங்கேற்றனர். உடலை வலிமைப்படுத்த உதவும் கார்டியோ உடற்பயிற்களுள் ரோயிங் உடற்பயிற்சியும் ஒன்று.இந்த சாம்பியன்ஷிப் போட்டியில் 19 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் முதல் 94 வயதுடையவர்கள் வரை பங்கேற்று அசத்தினர். 

Next Story

மேலும் செய்திகள்