ஜமால் கொலை விவகாரத்தில் நடந்தது என்ன?

அமெரிக்கா - சவுதி இடையிலான நட்புறவை சவாலாக்கியிருக்கும் பத்திரிக்கையாளர் ஜமால் கஷோகி கொலை விவகாரத்தில் நடந்தது என்ன என்பதை தற்போது பார்க்கலாம்.
ஜமால் கொலை விவகாரத்தில் நடந்தது என்ன?
x
அமெரிக்கா - சவுதி இடையிலான நட்புறவை சவாலாக்கியிருக்கும் பத்திரிக்கையாளர் ஜமால் கஷோகி கொலை விவகாரத்தில் நடந்தது என்ன என்பதை தற்போது பார்க்கலாம்...

ஒரு காலத்தில் சவுதி அரேபியா அரசுக்கு ஆலோசகராக இருந்தவர் 59 வயதான பத்திரிக்கையாளர் ஜமால் கஷோகி.

பின்னர் அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் சவுதி அரசு, மன்னர், இளவரசர்களை விமர்சனம் செய்து ஆங்கிலம், அரபு மொழிகளில் கட்டுரையை எழுதி வந்தார்.

2018 அக்டோபரில் துருக்கியை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்ய இஸ்தான்புல் சென்றார். அங்குள்ள சவுதி தூதரகத்திற்கு சில ஆவணங்களை வாங்க சென்றவர் பின்னர் காணவில்லை.
 
இதுதொடர்பாக விசாரித்த துருக்கி, பத்திரிகையாளர் ஜமால் சவுதி தூதரகத்தில் கொலை செய்யப்பட்டுள்ளார் என உறுதியாக கூறியதுடன், வீடியோ ஆதாரங்களையும் வெளியிட்டது. 

இதனையடுத்து சவுதி தூதரகத்தில் ஜமாலுக்கு அதிகளவு மருந்து கொடுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதும், அவருடைய உடல் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டதும் தெரியவந்தது.

சவுதி உளவுப்பிரிவு ஆப்ரேஷனில் அவர் கொல்லப்பட்டார் எனக் கூறப்பட்ட நிலையில், கொலையில் தொடர்புடையவர்கள் என ஐவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. பின்னர், அதனை 20 ஆண்டுகள் சிறை தண்டனையாக குறைத்தது.

இதுதொடர்பாக அமெரிக்க உளவுப்பிரிவு விசாரணையை மேற்கொண்ட போது, ஜமால் கொலையில் சவுதி இளவரசர் முகமது பின் சல்மானுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.

அப்போது சவுதி அரேபியாவுடன் நெருங்கிய உறவு பாராட்டிய டிரம்ப் நிர்வாகம்,  புலனாய்வு பிரிவு விசாரணை அறிக்கையை ரகசியம் நீக்கப்பட்ட ஆவணமாக வெளியிட மறுத்துவிட்டது. 

இந்நிலையில் சவுதி உடனான உறவில் மாறுபட்ட அணுகுமுறை இருக்கும் எனக் கூறிவந்த பைடன் நிர்வாகம், உளவுப்பிரிவு அறிக்கையை வெளியிட சம்மதித்தது. 

பத்திரிகையாளர் ஜமாலை கொலை செய்ய இளவரசர் முகமது பின் சல்மான் அனுமதி வழங்கினார் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, சவுதி நாட்டவர்களுக்கு எதிராக பொருளாதார தடை, விசா தடையையும் பைடன் நிர்வாகம் அறிவித்திருக்கிறது.

ஆனால் அமெரிக்க புலனாய்வு பிரிவு அறிக்கை ஏற்றுக்கொள்ள முடியாதது என சவுதி அரேபியா நிராகரித்துள்ளது. இதுபோன்று சவுதி இளவரசர் முகமது பின் சல்மானும் கொலையில் தொடர்பில்லை என மறுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்