போதைப்பொருள் மன்னனின் மனைவி கைது - விமான நிலையத்தில் அதிரடி

பிரபல மெக்சிகோ போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவன் எல் சாபோவின் மனைவியை அமெரிக்க காவல்துறை கைது செய்துள்ளது.
போதைப்பொருள் மன்னனின் மனைவி கைது - விமான நிலையத்தில் அதிரடி
x
மெக்சிகோ நாட்டை சேர்ந்த எல் சாப்போ போதைப்பொருள் கடத்தல் மன்னன் ஆவார். தற்போது அமெரிக்க சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அவருடைய கும்பலே அமெரிக்காவிற்கு அதிகமான போதைப்பொருட்களை கடத்தியுள்ளது என அமெரிக்க காவல்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் அவருடைய இளம் மனைவி எம்மா கொரொனல் ஐஸ்புரோவை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். விர்ஜீனியா மாகாணத்தில் உள்ள டல்லெஸ் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து போதைப் பொருட்களை கடத்த முயன்றதாக கைது செய்யப்பட்டிருக்கிறார். கொகைன், ஹெராயின், மெத்தாம்ப்டமைன் போன்ற போதை பொருட்கள் கடத்தல், விநியோக சதியில் எம்மாவுக்கு பங்குள்ளது என அமெரிக்க போலீஸ் தெரிவித்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்