பயங்கரவாதத்திற்கு எதிராக போராடி வருகிறோம் - இலங்கையில் இம்ரான்கான் பேச்சு

பாகிஸ்தான் பிரதமரின் வருகை இலங்கை மீது கொண்டுள்ள பற்றினை உறுதிப்படுத்தியுள்ளதாக இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்
பயங்கரவாதத்திற்கு எதிராக போராடி வருகிறோம் - இலங்கையில் இம்ரான்கான் பேச்சு
x
பாகிஸ்தான் பிரதமரின் வருகை இலங்கை மீது கொண்டுள்ள பற்றினை உறுதிப்படுத்தியுள்ளதாக இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச  தெரிவித்துள்ளார்

இரண்டு நாள் பயணமாக இலங்கை சென்றுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சவை சந்தித்து பேசினார்,. அப்போது  இலங்கை-பாகிஸ்தான் இடையேயான நல்லுறுவை சிறந்த முறையில் பேணுவது  அவசியம் என்று மகிந்த ராஜபக்ச வலியுறுத்தினார்,. பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், வர்த்தக முதலீட்டாளர்களுடன் இலங்கைக்கு வருகை தந்ததை மகிழ்வுடன் ஏற்று கொள்வதாக தெரிவித்தார்,. மேலும்  இரு நாடுகளுக்கும் இடையில் சுற்றுலா மற்றும் விமான சேவை துறைகளின் செயற்பாட்டை அதிகரிக்கவேண்டும் என்றும் மகிந்த ராஜபக்ச கோரிக்கை  விடுத்தார்

இலங்கை தலைநகர் கொழும்புவில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,  உலகிலேயே பெரிய புத்தர் சிலை பாகிஸ்தானில் உள்ளதாகவும்,  புத்த மதத்தினர்  பாகிஸ்தானுக்கு வருகை தரும் வகையில் புனித தலங்களை இணைக்கும் சுற்றுலா திட்டத்தை உருவாக்கப்படும் என்று தெரிவித்தார்,. வர்த்தக உறவுகள் மூலம் இரு நாடுகளும் மேலும் ஒன்றுபட முடியும் என்றும் பயங்கரவாதம் உள்ள ஒரு நாட்டினால் முன்னேற்றம் அடைய முடியாது என்றும் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், இலங்கை இஸ்லாமிய காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் உடன் நடைபெற இருந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய, அமைச்சரவை செய்தி தொடர்பாளர் கெஹலியா ரம்புக்வெல்ல பாதுகாப்பு அடிப்படையில் இந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டது என்றார். இதற்கும் இலங்கை அரசுக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும் அவர் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்