'போயிங்' விமானத்துக்கு தடை ஏன்?

அடுத்தடுத்து விபத்தில் சிக்கும் போயிங் ரக விமானம்...தரையிறங்க தடை விதிக்கும் உலக நாடுகள் குறித்து விளக்குகிறது இந்த தொகுப்பு....
போயிங் விமானத்துக்கு தடை ஏன்?
x
 அடுத்தடுத்து விபத்தில் சிக்கும் போயிங் ரக விமானம்...தரையிறங்க தடை விதிக்கும் உலக நாடுகள் குறித்து விளக்குகிறது இந்த தொகுப்பு....

மனிதன் உருவாக்கிய ஆச்சரிய கண்டுபிடிப்புகளில் ஒன்று 'விமானம்' .  காரணம் பறவையின் வடிவத்தை கொண்டுள்ள அலுமினிய தகடு, சுமார் 200 பேரை தூக்கிக்கொண்டு பறக்கும் என்று 18ஆம் நூற்றாண்டில் யாரும் கூறி இருந்தால், அது சிரிப்பலைகளைதான் உண்டாக்கி இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. 

'விமானம்', கண்டுபிடிப்பின் உச்சம் என்று ஒருபுறம் கூறப்பட்டாலும், அதன் பாதுகாப்பு குறித்த கேள்வியும் எழாமலில்லை. விமான தயாரிப்பை பொறுத்தவரை போட்டி என்பது இரண்டு நிறுவனங்களுக்குள் தான். ஒன்று  போயிங்,  மற்றொன்று ஏர்பஸ். 

இதில் போயிங் நிறுவனம்தான் அடிக்கடி விமர்சனங்களில் சிக்கி கொள்கிறது. போயிங் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளை வாடிக்கையாளர்களாக கொண்டிருக்கிறது.  காரணம் அதன் அதிநவீன வசதிகளுடன் கூடிய வடிவமைப்புதான். இந்நிலையில் போயிங் ரக விமானத்தின் பாதுகாப்பில் ஐயம் ஏற்படுவதும், அதன் மீது தடை விதிப்பதும் தொடர்கதையாகி வருகிறது. 

போயிங் தயாரிப்பான போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானம், இந்தோனேசியாவில் 2018 ஆம் ஆண்டில் விபத்துக்கு உள்ளானது. அந்த விபத்தில் 189 பேர் உயிரிழந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்