நாசா "பெர்சவரன்ஸ்" ரோவர் தரையிறங்கியது - செவ்வாய் ஆராய்ச்சியில் வரலாற்று சாதனை : சாதனைக்கு பின்னால் இந்திய வம்சாவளி விஞ்ஞானி

நாசாவின் "பெர்சவரன்ஸ்" ரோவர் வெற்றிகரமாக தரையிறங்க பணியாற்றிய அமெரிக்க வாழ் இந்தியர் சுவாதி மோகனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
நாசா பெர்சவரன்ஸ் ரோவர் தரையிறங்கியது - செவ்வாய் ஆராய்ச்சியில் வரலாற்று சாதனை : சாதனைக்கு பின்னால் இந்திய வம்சாவளி விஞ்ஞானி
x
செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் இருந்தனவா? என்பது குறித்து ஆய்வு செய்ய நாசா அனுப்பிய பெர்சவரன்ஸ் விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கியது. செவ்வாய் கிரகத்தில் கணிசமான நீரோட்டம் கண்டிருந்ததாக கருதப்படும் ஜெசீரோ கிரேட்டர் பள்ளத்தாக்கில் பெர்சவரன்ஸ் ரோவர் தரையிறங்கியது. செவ்வாயின் மேற்பரப்பில் இருக்கும் மண், பாறைகளின் மாதிரிகளை சேகரித்துக் கொண்டு ரோவர் 2030ல் பூமிக்கு திரும்புகிறது. விண்கலம் 7 மாதங்களில் செவ்வாய்க்கு பயணித்ததைவிட அது தரையிறங்க எடுக்கும் 7 நிமிடங்கள் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்பட்டது. தற்போது அந்த 7 நிமிடங்களை வெற்றிகரமாக கடந்த ரோவர் செவ்வாயில் தரையிறங்கி சாதனை படைத்திருக்கிறது. இந்த வரலாற்று சாதனைக்கு பின்னால் அமெரிக்கவாழ் இந்திய பெண் விஞ்ஞானி சுவாதி மோகனின் உழைப்பு உள்ளது. இவர்தான் ரோவர் தரையிறங்கும் போது சூழலுக்கு ஏற்ப உயரத்தை கட்டுப்படுத்துதல் மற்றும் தரையிறங்குவதற்கான பிரத்யேக வழிமுறை தொழில்நுட்பத்தை உருவாக்கியிருக்கிறார். அவருக்கு பல தரப்பில் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்