டெக்சாஸ் மாநிலத்தில் கடும் பனிப்பொழிவு - கடும் குளிருக்கு 21 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் கடும் குளிருக்கு 21 பேர் உயிரிழந்து உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெக்சாஸ் மாநிலத்தில் கடும் பனிப்பொழிவு  - கடும் குளிருக்கு 21 பேர் உயிரிழப்பு
x
அமெரிக்காவின் டெக்சாஸில் வரலாறு காணான பனிப்பொழிவு நிலவுகிறது. வீடுகள், கார்கள், சாலைகள், மரங்கள் என அனைத்தும் உறை பனிக்குள் மூழ்கி கிடக்கிறது. அங்கு நீர்வீழ்ச்சிகளும் பனி சிற்பங்களாக உறைந்து காணப்படுகிறது. அங்கு குளிர் அதிகரிப்பதால் மின்சார தேவை அதிகரித்து உள்ளது. ஆனால், தேவைக்கு ஏற்ப உற்பத்தி இல்லாததால் மின்சாரம் இல்லாமல் 40 லட்சம் மக்கள் மின்சாரமின்றி பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். மேலும் மேலும் அங்கு பனி அதிகரிக்கும் நிலையில் கடும் குளிருக்கு 21 பேர் பலியாகியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டெஸ்சாஸ் மாநிலத்திற்கு அவசர உதவிகளை உடனடியாக வழங்க தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன்  உறுதியளித்துள்ளார். சாலைகளில் பனிக்கட்டிகளை அகற்றும் பணியும் தீவிரமாக நடைபெறுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்