"பிரபாகரன் விடுதலை புலிகள் பற்றி பேசினால் நடவடிக்கை" - அமைச்சர் ரியல் எட்மிரல் சரத் வீரசேகர

இலங்கை நாடாளுமன்றத்தில் விடுதலை புலிகள் மற்றும் பிரபாகரன் குறித்து பேசுவதற்கு இனி ஒருபோதும் அனுமதிக்க முடியாது என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியல் எட்மிரல் சரத் வீரசேகர கூறியுள்ளார்.
பிரபாகரன் விடுதலை புலிகள் பற்றி பேசினால் நடவடிக்கை - அமைச்சர் ரியல் எட்மிரல் சரத் வீரசேகர
x
இலங்கை நாடாளுமன்றத்தில் விடுதலை புலிகள் மற்றும் பிரபாகரன் குறித்து பேசுவதற்கு இனி ஒருபோதும் அனுமதிக்க முடியாது என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியல் எட்மிரல் சரத் வீரசேகர கூறியுள்ளார்.

இது தொடர்பாக பிபிசிக்கு அவர்  அளித்த பேட்டியில், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ள தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு, அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை நாடாளுமன்றத்தில்  புகழ்ந்து பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறினார். 

ஜெர்மன் நாடாளுமன்றத்தில் நாசிசவாதம், ஹிட்லர் குறித்து பேச முடியாது என்பதை மேற்கோள் காட்டிய அவர், அதுபோல் இலங்கை நாடாளுமன்றத்திலும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பையோ, வேலுப்பிள்ளை பிரபாகரனையோ புகழ்ந்து பேசுவதற்கு ஒருபோதும் இடமளிக்க கூடாது என்றார். மேலும், நாடாளுமன்றத்துக்குள் விடுதலைப் புலிகள் பற்றி பேசுவதற்கு எதிராக சட்டம் இயற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் ரியல் எட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்

Next Story

மேலும் செய்திகள்