இது தான் காதலர் தினம் உருவான வரலாறு.

காதலர் தினம் உருவானது எப்படி...? தெரிந்து கொள்ளலாம், தற்போது...
இது தான் காதலர் தினம் உருவான வரலாறு.
x
காதலர் தினம் உருவானது எப்படி...? தெரிந்து கொள்ளலாம், தற்போது...

காதல்... மனம், உடல் மற்றும் ஆன்மாவுடன் ஒருங்கிணைந்த ஒரு ஆழமான அன்பு சங்க இலக்கியம் தொட்டு இன்றைய இலக்கியம் வரையில் அற்புதமான அந்த அன்பை சொல்லாத  இலக்கியங்கள் இல்லை... ஏறக்குறைய 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான திருக்குறளை விடவும் யாரால் காதலின் உன்னதத்தை உயர்வாக சொல்லிவிட முடியாது.இன்பத்துப்பாலில் தலைவனும், தலைவியும் தத்தம் காதலின் மிகுதியை கூறும் குறள்கள் இடம்பெற்றிருக்கிறது.அதில் வள்ளுவர் இப்படி கூறுகிறார்...  நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல் அஞ்சுதும் வேபாக் கறிந்து. இதனுடைய பொருள் என்னவென்றால்... தன்னுடைய காதலர் நெஞ்சில் உள்ளார், தான் சூடாக ஏதாவது உண்டால் வெந்துவிடுவார், எனவே சூடாக எதையும் சாப்பிட மாட்டேன் என காதலிக்கும் தலைவன் அல்லது தலைவி கூறுவதாகும்.இந்த குறளில் திருவள்ளுவர் காதலின் ஆழத்தை மட்டும் கூறவில்லை... இறுதிவரையில் நேசித்தவருடன் வாழ உடலையும், மனதையும் பேணுவதையும் சிறப்பித்திருக்கிறார். இதுபோன்று காதலை பல தமிழ் இலக்கியங்கள் சிறப்பிக்கிறது.இந்த அற்புதமான காதலை தெரிவிக்கும் நாளாக ஆண்டுதோறும் பிப்ரவரி 14 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.  அன்றைய தினம், இளம் யுவன், யுவதிகளின் வயிற்றில் பட்டாம்பூச்சிகள் பறக்க தொடங்கிவிடும்...ரோஜாக்கள், சாக்லெட்கள்,  கரடி பொம்மை, வாழ்த்து அட்டைகள் போன்றவற்றை பரிசாக வழங்கி மனதினை பரிமாற்றிக்கொள்வார்கள்....இந்த "வாலன்டைன்ஸ் டே" எனப்படும் காதலர் தினம் ரோமானிய அரசனின் காலத்தில்தான் கொண்டாடப்பட்டதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.ரோமாபுரியில் கிளாடியுஸ் மிமி ஆட்சியின் போது அரச உத்தரவை மீறி இளம்ஜோடிகளுக்கு பாதிரியார் வாலன்டைன் திருமணம் செய்து வைத்துள்ளார். இந்த குற்றத்திற்காக அவர் மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது காவலாளியின் பார்வையற்ற மகள் அஸ்டோரியசுடன் அவருக்கு காதல் ஏற்பட்டது. இது தெரிய வந்ததும் அஸ்டோரியஸ் வீட்டில் சிறைவைக்கப்பட்டார். ஆனால் வாலன்டனைக்கு கி.பி. 270-ல் பிப்ரவரி 14-ம் தேதி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. பின்னாளில் இந்த தினம் வாலன்டைன்ஸ் தினமாக கொண்டாடப்படுகிறது.  

இது தான் காதலர் தினம் உருவான வரலாறு.


Next Story

மேலும் செய்திகள்