பதவி நீக்க தீர்மான விசாரணை - டிரம்ப் விடுவிப்பு

பதவி நீக்க தீர்மான விசாரணையில் இருந்து முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் விடுவிக்கப்பட்டு உள்ளார்.
பதவி நீக்க தீர்மான விசாரணை - டிரம்ப் விடுவிப்பு
x
பதவி நீக்க தீர்மான விசாரணையில் இருந்து முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் விடுவிக்கப்பட்டு உள்ளார். 

அமெரிக்க அதிபராக ஜோ பைடன் தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து, அந்நாட்டு நாடாளுமன்றத்தில், முன்னாள் அதிபர் டிரம்ப்பின்  ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இதற்கு டிரம்ப் தான் காரணம் என்று ஜனநாயக கட்சி எம்.பிக்கள் குற்றம்சாட்டி, அவருக்கு எதிராக பதவி நீக்க தீர்மானத்தை முன்மொழிந்தனர். அமெரிக்க நாடாளுமன்றத்தின் கீழவையான பிரதிநிதிகள் சபையில், இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மேலவையான செனட் சபைக்கு தீர்மானம் கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில், இது தொடர்பாக, செனட் சபையில் நடந்த வாக்கெடுப்பில், டிரம்புக்கு எதிராக 57 பேர் மட்டுமே வாக்களித்தனர். தீர்மானத்தை நிறைவேற்ற 67 வாக்குகள் தேவைப்பட்டதால், டிரம்ப் விடுவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டார். இதன்மூலம், தொடர்ச்சியாக 2 முறை பதவி நீக்க தீர்மான விசாரணையில் இருந்து டிரம்ப் விடுவிக்கப்பட்டு உள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்